• Aug 31 2026

வரட்சியால் வறண்டு போன குளங்கள் கால்நடை வளர்ப்பாளர்கள் கடும் பாதிப்பு

dorin / Aug 31st 2026, 12:53 pm
image

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பகுதியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, கல்மெடியாவ பகுதியில் அமைந்துள்ள இரு குளங்களிலும் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.

எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக பிரதேசத்தில் நீர்நிலைகள் படிப்படியாக வற்றிவரும் நிலையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குளங்களில் போதியளவு நீர் இல்லாததால் கால்நடைகளுக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலும், அவற்றை பராமரிப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பாக மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான நீர் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் பற்றாக்குறையாகி வருவதால், கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், வரட்சி நிலை தொடரும் பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு அவசரமாக குடிநீர் வசதி மற்றும் கால்நடைகளுக்கான நீர்,  உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களின் வாழ்வாதாரம் கால் நடை வளர்ப்பே காணப்படுகிறது இதனால் நீரின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாழ்வாதாரங்ஙளை சீரமைக்க வழியமைத்து கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.


வரட்சியால் வறண்டு போன குளங்கள் கால்நடை வளர்ப்பாளர்கள் கடும் பாதிப்பு திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பகுதியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, கல்மெடியாவ பகுதியில் அமைந்துள்ள இரு குளங்களிலும் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக பிரதேசத்தில் நீர்நிலைகள் படிப்படியாக வற்றிவரும் நிலையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.குளங்களில் போதியளவு நீர் இல்லாததால் கால்நடைகளுக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலும், அவற்றை பராமரிப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான நீர் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் பற்றாக்குறையாகி வருவதால், கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், வரட்சி நிலை தொடரும் பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.எனவே, பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு அவசரமாக குடிநீர் வசதி மற்றும் கால்நடைகளுக்கான நீர்,  உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தங்களின் வாழ்வாதாரம் கால் நடை வளர்ப்பே காணப்படுகிறது இதனால் நீரின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாழ்வாதாரங்ஙளை சீரமைக்க வழியமைத்து கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement