• Apr 23 2025

யாழில் நடைபெற்ற அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு பூஜை வழிபாடுகள்!

Chithra / Mar 5th 2025, 3:04 pm
image


ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக.இரமணா வழங்கும் அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வு பூஜை வழிபாடுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இலங்கை திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த முழுநீள திரைப்படமாக இது காணப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களை உள்ளடக்கி இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.

நிகழ்வில் கலைஞர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. 

பின்னர் சம்பிரதாயபூர்வமாக படப்பிடிப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. 

தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன், கதாநாயகி, ஏனைய நடிகர்கள், திரைப்படம் சார்ந்து பணியாற்றும் ஏனையோர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஷவாஹிர், பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த புலம்பெயர் தமிழர்களும் இதில் கலந்துகொண்டனர்.


யாழில் நடைபெற்ற அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு பூஜை வழிபாடுகள் ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக.இரமணா வழங்கும் அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வு பூஜை வழிபாடுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.இலங்கை திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த முழுநீள திரைப்படமாக இது காணப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களை உள்ளடக்கி இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.நிகழ்வில் கலைஞர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சம்பிரதாயபூர்வமாக படப்பிடிப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன், கதாநாயகி, ஏனைய நடிகர்கள், திரைப்படம் சார்ந்து பணியாற்றும் ஏனையோர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஷவாஹிர், பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த புலம்பெயர் தமிழர்களும் இதில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement