மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்ஸின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக புனித பீட்டர்ஸ் தேவாலயம் தெரிவித்துள்ளது.
88 வயதான போப் பிரான்ஸிஸ், கடந்த 6-ஆம் திகதி மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக இத்தாலியின் ரோம் நகரில் உள்ள கெமேல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து குறித்த வைத்தியசாலையில் போப் பிரான்சிஸ்ஸுக்கு தொடர்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக புனித பீட்டர்ஸ் தேவாலயத்தின் செய்தித் தொடர்பாளர் என்சோ தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலுள்ள தன்னாட்சிப் பெற்ற நாடான வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க சபையின் திருத்தந்தையுமான பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக சுவாசக்கோளாறு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போப் பிரான்சிஸ்ஸின் உடல் நிலையில் முன்னேற்றம் புனித பீட்டர்ஸ் தேவாலயம் தெரிவிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்ஸின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக புனித பீட்டர்ஸ் தேவாலயம் தெரிவித்துள்ளது.88 வயதான போப் பிரான்ஸிஸ், கடந்த 6-ஆம் திகதி மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக இத்தாலியின் ரோம் நகரில் உள்ள கெமேல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து குறித்த வைத்தியசாலையில் போப் பிரான்சிஸ்ஸுக்கு தொடர்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக புனித பீட்டர்ஸ் தேவாலயத்தின் செய்தித் தொடர்பாளர் என்சோ தெரிவித்துள்ளார்.ஐரோப்பாவிலுள்ள தன்னாட்சிப் பெற்ற நாடான வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க சபையின் திருத்தந்தையுமான பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக சுவாசக்கோளாறு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.