தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக குகதாசன் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அது தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு நடத்தப்பட்டு குகதாசன் தெரிவு செய்யப்பட்டாலும், அதன் பின்னர் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக செயலாளர் தெரிவு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாளைய தினம் நடைபெறவிருந்த கட்சியின் தேசிய மாநாடு மாவை சேனாதிராஜாவினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி கருத்து வெளியிட்ட, தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று காலை(27) திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்
நடைபெற்ற நிலையில், இந்தக் கூட்டத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பல குழப்பங்கள் நிலவிய நிலையில் புதிய பதவிகள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன. அத்துடன் 17வது தேசிய மாநாடு இடம்பெற இருந்த நிலையில் பல்வேறு குழப்பங்கள் காணப்பட்டதன் காரணமாக தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைப்பு - மாவை சேனாதிராஜா தெரிவிப்பு.samugammedia தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக குகதாசன் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அது தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.வாக்கெடுப்பு நடத்தப்பட்டு குகதாசன் தெரிவு செய்யப்பட்டாலும், அதன் பின்னர் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக செயலாளர் தெரிவு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளைய தினம் நடைபெறவிருந்த கட்சியின் தேசிய மாநாடு மாவை சேனாதிராஜாவினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது பற்றி கருத்து வெளியிட்ட, தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று காலை(27) திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்தக் கூட்டத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பல குழப்பங்கள் நிலவிய நிலையில் புதிய பதவிகள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன. அத்துடன் 17வது தேசிய மாநாடு இடம்பெற இருந்த நிலையில் பல்வேறு குழப்பங்கள் காணப்பட்டதன் காரணமாக தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.