தேசிய மின்சார அமைப்பின் சமநிலையைப் பேணுவதற்கு கடந்த காலங்களில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கங்களின் திட்டமிடல் இல்லாமையும் தொலைநோக்குப் பார்வையற்ற வேலைத்திட்டமும் மின்வெட்டுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதில் கடந்த கால அரசாங்கங்கள் உரிய கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் இல்லாத தவறான வழிகாட்டுதலும் இந்த நிலைமைக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.
இந்த நிலைமைக்கான காரணங்கள் முழுமையாக ஆராயப்பட்டு, இது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கூறினார்.
கடந்த அரசாங்கங்களின் கவனக்குறைவான திட்டமே மின்வெட்டுக்குக் காரணம் - வலுசக்தி அமைச்சர் தேசிய மின்சார அமைப்பின் சமநிலையைப் பேணுவதற்கு கடந்த காலங்களில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.முன்னைய அரசாங்கங்களின் திட்டமிடல் இல்லாமையும் தொலைநோக்குப் பார்வையற்ற வேலைத்திட்டமும் மின்வெட்டுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.தேசிய மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதில் கடந்த கால அரசாங்கங்கள் உரிய கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் இல்லாத தவறான வழிகாட்டுதலும் இந்த நிலைமைக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.இந்த நிலைமைக்கான காரணங்கள் முழுமையாக ஆராயப்பட்டு, இது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கூறினார்.