• Feb 10 2025

மின் தடைக்கான காரணத்தைக் கண்டறிய விசேட விசாரணை! இன்று வெளியாகவுள்ள தகவல்

Chithra / Feb 10th 2025, 7:15 am
image

 

நாடு முழுவதும் நேற்று ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை 

இன்று வெளியிடும் என மின்சார சபை தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள் குழு விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து எரிசக்தி அமைச்சும் விரிவான விசாரணையை நடத்தி வருவதாக 

அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.

இதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவளை நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் மின்சார தேவை குறைவாக இருப்பதும், மொத்த மின்சார உற்பத்தியில் பெரும் சதவீதம் ஒப்பீட்டளவில் நிலையற்ற சூரிய சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதும் முழு மின்சார கட்டமைப்பின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணம் என இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த நிலைமையை முறையான விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்று குறித்த சங்கம் சுட்டிக்காட்டுயுள்ளது.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் 33 kV  அருகே ஏற்பட்ட திடீர் மின் தடையுடன் குறைந்த மின்சார தேவை மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக நிலையற்றதாக இருந்த தேசிய மின்சார அமைப்பு சமநிலையற்றதாக மாறியது. 

தானியங்கி அவசரகால செயலிழப்பு முகாமைத்துவ செயன்முறையால் அமைப்பை மீட்டெடுக்க முடியவில்லை. 

இதன் விளைவாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

முந்தைய பல ஞாயிற்றுக்கிழமைகளில் தேசிய மின்சார அமைப்பு இது போன்ற ஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கி இருந்த போதிலும்,  மின்சார சபை அமைப்பு கட்டுப்பாட்டுப் பிரிவின் திறமையால் முழுமையான மின்வெட்டு தடுக்கப்பட்டதாகவும் மேற்படி சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இன்றைய தேசிய மின்சார அமைப்பின் மோசமான நிலை காரணமாக மின் தடையை 

தடுத்திருக்க முடியாது என்று அனுமானித்தாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டது.

மின் தடைக்கான காரணத்தைக் கண்டறிய விசேட விசாரணை இன்று வெளியாகவுள்ள தகவல்  நாடு முழுவதும் நேற்று ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை இன்று வெளியிடும் என மின்சார சபை தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும், இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள் குழு விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து எரிசக்தி அமைச்சும் விரிவான விசாரணையை நடத்தி வருவதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.இதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவளை நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் மின்சார தேவை குறைவாக இருப்பதும், மொத்த மின்சார உற்பத்தியில் பெரும் சதவீதம் ஒப்பீட்டளவில் நிலையற்ற சூரிய சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதும் முழு மின்சார கட்டமைப்பின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணம் என இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இருப்பினும், இந்த நிலைமையை முறையான விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்று குறித்த சங்கம் சுட்டிக்காட்டுயுள்ளது.பாணந்துறை உப மின் கட்டமைப்பில் 33 kV  அருகே ஏற்பட்ட திடீர் மின் தடையுடன் குறைந்த மின்சார தேவை மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக நிலையற்றதாக இருந்த தேசிய மின்சார அமைப்பு சமநிலையற்றதாக மாறியது. தானியங்கி அவசரகால செயலிழப்பு முகாமைத்துவ செயன்முறையால் அமைப்பை மீட்டெடுக்க முடியவில்லை. இதன் விளைவாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.முந்தைய பல ஞாயிற்றுக்கிழமைகளில் தேசிய மின்சார அமைப்பு இது போன்ற ஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கி இருந்த போதிலும்,  மின்சார சபை அமைப்பு கட்டுப்பாட்டுப் பிரிவின் திறமையால் முழுமையான மின்வெட்டு தடுக்கப்பட்டதாகவும் மேற்படி சங்கம் குறிப்பிட்டுள்ளது.இருப்பினும், இன்றைய தேசிய மின்சார அமைப்பின் மோசமான நிலை காரணமாக மின் தடையை தடுத்திருக்க முடியாது என்று அனுமானித்தாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டது.

Advertisement

Advertisement

Advertisement