• Nov 28 2024

10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு! எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Chithra / Jun 19th 2024, 8:44 am
image

 

10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதாவது,

இந்த நாட்டின் தனியார் துறை பணியாளர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் வரி செலுத்துகின்றனர்.

அதேபோல் மின் கட்டணம் மற்றும் நீர்க் கட்டணம் அதிகரித்துள்ளமையினால் நாட்டு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைக்கு மத்தியிலேயே இப்போது புதிதாக மேலும் வரி அறவிட தீர்மானித்துள்ளார்கள்.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காகவே வாடகை வருமான வரி அறிவிடப்படுவதாக ஜனாதிபதி கூறுகின்றார்.

உள்நாட்டு தேசிய உற்பத்தி ஊடாக வருமானத்தினை அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மக்கள் மீது வரி சுமைகளை அதிகரிப்பதன் மூலம் மேலும் நெருக்கடி நிலை ஏற்படும்.

ஜனாதிபதி இந்த நாட்டில் மேலும் ஆட்சியில் நீடிப்பதற்கு, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.

நாட்டில் வரிசுமையை அதிகரிப்பதற்காகவே அவர்கள் அதனைக் கோருகின்றார்களா என்ற கேள்வியும் தற்போது எழுகின்றது என தெரிவித்துள்ளார்.   

10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்  10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதாவது,இந்த நாட்டின் தனியார் துறை பணியாளர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் வரி செலுத்துகின்றனர்.அதேபோல் மின் கட்டணம் மற்றும் நீர்க் கட்டணம் அதிகரித்துள்ளமையினால் நாட்டு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைக்கு மத்தியிலேயே இப்போது புதிதாக மேலும் வரி அறவிட தீர்மானித்துள்ளார்கள்.அரச வருமானத்தை அதிகரிப்பதற்காகவே வாடகை வருமான வரி அறிவிடப்படுவதாக ஜனாதிபதி கூறுகின்றார்.உள்நாட்டு தேசிய உற்பத்தி ஊடாக வருமானத்தினை அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு மக்கள் மீது வரி சுமைகளை அதிகரிப்பதன் மூலம் மேலும் நெருக்கடி நிலை ஏற்படும்.ஜனாதிபதி இந்த நாட்டில் மேலும் ஆட்சியில் நீடிப்பதற்கு, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.நாட்டில் வரிசுமையை அதிகரிப்பதற்காகவே அவர்கள் அதனைக் கோருகின்றார்களா என்ற கேள்வியும் தற்போது எழுகின்றது என தெரிவித்துள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement