• Oct 18 2025

வடக்கில் மின்தடை; பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு

Chithra / Oct 17th 2025, 10:28 am
image


வடக்கிலுள்ள நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது 

வவுனியா, மன்னார் 220kV  மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான (Re-conductoring) வேலைகளிற்காக வடமாகாணத்திற்கான 132kV  வவுனியா புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது எதிர்வரும் ஜப்பசி மாதம் 26ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை 'காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை துண்டிக்கப்படுவதால், யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் ,முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது. 

மேலும் வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

வடக்கில் மின்தடை; பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு வடக்கிலுள்ள நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது வவுனியா, மன்னார் 220kV  மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான (Re-conductoring) வேலைகளிற்காக வடமாகாணத்திற்கான 132kV  வவுனியா புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது எதிர்வரும் ஜப்பசி மாதம் 26ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை 'காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை துண்டிக்கப்படுவதால், யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் ,முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது. மேலும் வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement