நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாணந்துறை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கூரை சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோர் இன்று (9) மாலை 4 மணி வரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தோடு நாடு முழுவதும் மின்சாரம் மீண்டும் கிடைக்கும் வரை பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை தேசிய நீர்வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொள்கிறது.
நீர் விநியோக நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் மின்தடை – மக்களுக்கு அவசர அறிவிப்பு நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பாணந்துறை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இந்நிலையில் கூரை சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோர் இன்று (9) மாலை 4 மணி வரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.அத்தோடு நாடு முழுவதும் மின்சாரம் மீண்டும் கிடைக்கும் வரை பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை தேசிய நீர்வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொள்கிறது.நீர் விநியோக நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.