இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பரவும் போலி தகவல்கள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் என குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத போலி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தகவல்கள் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதல்ல பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை பொலிஸாரால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் இலங்கை பொலிஸின் இணையத்தளம் மற்றும் பொலிஸ் ஊடகப்பிரிவின் அறிக்கைகளில் மாத்திரமே வெளியிடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே சமூக ஊடகங்களில் பரவும் உண்மைக்கு புறம்பான போலி தகவல்கள் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் போலி தகவல்கள் - பொலிஸாரால் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பரவும் போலி தகவல்கள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் என குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத போலி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதல்ல பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கை பொலிஸாரால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் இலங்கை பொலிஸின் இணையத்தளம் மற்றும் பொலிஸ் ஊடகப்பிரிவின் அறிக்கைகளில் மாத்திரமே வெளியிடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.எனவே சமூக ஊடகங்களில் பரவும் உண்மைக்கு புறம்பான போலி தகவல்கள் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.