ஐக்கிய நாடுகளின் புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் ஊடாக (I.O.M ) மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் ஒரு தொகுதி பொருட்கள் இன்றைய தினம் (8) கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சுமார் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.ஆஸாத் கையளிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு நோயாளர் விடுதிகளில்,நோயாளர்கள் பயன்படுத்துகின்ற ஒரு தொகுதி பொருட்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் துணைத் தூதுவர் தலைமை இடப்பெயர்வு சுகாதார அதிகாரி டாக்டர் சிமியோனெட்டி அசிஸ்,ஐக்கிய நாடுகளின் புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் இலங்கை மற்றும் மாலத்தீவுகளின் இடப்பெயர்வு சுகாதார மருத்துவர் ஆர்.எம்.உதீர சரித்ரா ஹரிச்சந்திர ஆகியோர் இணைந்து கையளித்தனர்.
இதன் போது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்,வைத்தியர்கள்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளுக்கு பொருட்கள் கையளிப்பு ஐக்கிய நாடுகளின் புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் ஊடாக (I.O.M ) மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் ஒரு தொகுதி பொருட்கள் இன்றைய தினம் (8) கையளிக்கப்பட்டுள்ளது.மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சுமார் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.ஆஸாத் கையளிக்கப்பட்டுள்ளது.புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு நோயாளர் விடுதிகளில்,நோயாளர்கள் பயன்படுத்துகின்ற ஒரு தொகுதி பொருட்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் துணைத் தூதுவர் தலைமை இடப்பெயர்வு சுகாதார அதிகாரி டாக்டர் சிமியோனெட்டி அசிஸ்,ஐக்கிய நாடுகளின் புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் இலங்கை மற்றும் மாலத்தீவுகளின் இடப்பெயர்வு சுகாதார மருத்துவர் ஆர்.எம்.உதீர சரித்ரா ஹரிச்சந்திர ஆகியோர் இணைந்து கையளித்தனர்.இதன் போது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்,வைத்தியர்கள்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.