• Dec 04 2024

நாட்டில் மீண்டும் மின் தடை! அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்..! அமைச்சர் அறிவிப்பு

Chithra / May 23rd 2024, 10:31 am
image

 

மோசமான காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார்

இதேவேளை மின்சாரத்தை சீரமைக்க மேலதிக சேவை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார பாவனையாளர்கள் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு அல்லது குறுஞ்செய்தி அனுப்பி மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க முடியும் என அமைச்சர் தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மீண்டும் மின் தடை அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம். அமைச்சர் அறிவிப்பு  மோசமான காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார்இதேவேளை மின்சாரத்தை சீரமைக்க மேலதிக சேவை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, மின்சார பாவனையாளர்கள் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு அல்லது குறுஞ்செய்தி அனுப்பி மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க முடியும் என அமைச்சர் தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement