• Jun 24 2024

முருங்கன் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் - உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Chithra / May 23rd 2024, 10:48 am
image

Advertisement

 

மன்னார் முருங்கன் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (23) காலை இரண்டாவது நாளாகவும் தனித்து திரிகின்ற காட்டு யானையை அங்கிருந்து வெளியேற்ற அரச அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வர வேண்டும் என அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் முருங்கன் பகுதியில் இன்றைய தினம் காலை இரண்டாவது நாளாகவும் தனித்து காட்டு யானை ஒன்று நடமாடி திரிகின்றன.

இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

நேற்றைய தினம்  காலையும் குறித்த யானை குறித்த பிரதேசத்தில் சுற்றித் திரிந்துள்ளது.

மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் குறித்த யானையை காட்டுக்குள் துரத்தி உள்ளனர்.

குறித்த யானையை உடனடியாக பிடித்து பிரிதொரு இடத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் உடன் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை தற்போது குறித்த யானையினால் ஏற்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேசச் செயலாளரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

குறித்த  விடயம் தொடர்பாக உடனடியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தினோம்.

உடனடியாக தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் எதிர் வரும் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தார்.


முருங்கன் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் - உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை  மன்னார் முருங்கன் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (23) காலை இரண்டாவது நாளாகவும் தனித்து திரிகின்ற காட்டு யானையை அங்கிருந்து வெளியேற்ற அரச அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வர வேண்டும் என அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.மன்னார் முருங்கன் பகுதியில் இன்றைய தினம் காலை இரண்டாவது நாளாகவும் தனித்து காட்டு யானை ஒன்று நடமாடி திரிகின்றன.இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.நேற்றைய தினம்  காலையும் குறித்த யானை குறித்த பிரதேசத்தில் சுற்றித் திரிந்துள்ளது.மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் குறித்த யானையை காட்டுக்குள் துரத்தி உள்ளனர்.குறித்த யானையை உடனடியாக பிடித்து பிரிதொரு இடத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் உடன் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை தற்போது குறித்த யானையினால் ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேசச் செயலாளரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.குறித்த  விடயம் தொடர்பாக உடனடியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தினோம்.உடனடியாக தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் எதிர் வரும் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement