காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான பிர்தௌஸ் நளீமியின் அழைப்பின்பேரில் நேற்றையதினம்(24) காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.
இதன்போது காத்தான்குடி நகர சபையின் செயலாளர் றிப்கா சபீனை சந்தித்து பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வீதி அபிவிருத்திப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.
உலக வங்கியின் நிதி உதவியோடு கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வீதி அபிவிருத்திகள் தொடர்பாகவும், அது தொடர்பில் அப்பிரதேச மக்கள் முன்வைத்துள்ள ‘வீதியானது இருபக்க வடிகான்களைக் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை தொடர்பிலும் இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாயல் (அல் அக்ஸா பள்ளிவாயல்) வீதி மற்றும் புதிய காத்தான்குடி பெண்கள் சந்தை வீதி ஆகிய வீதிகளை பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டதுடன் பிரதேச மக்களுடனும் கலந்துரையாடினார்.
அண்மையில் இப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நேரில் சந்தித்து இந்த வீதி அபிவிருத்தி பணி தொடர்பில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
இங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்,
இந்த விடயங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபை, உலக வங்கி பிரதிநிதிகள் மற்றும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வரவுள்ளதாகவும் மக்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு, தரமான முறையில் இந்த வீதியினை அபிவிருத்தி செய்வதை தாம் உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விஜயத்தில் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
காத்தான்குடி பிரதேச வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட பிரபு எம்.பி. காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான பிர்தௌஸ் நளீமியின் அழைப்பின்பேரில் நேற்றையதினம்(24) காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.இதன்போது காத்தான்குடி நகர சபையின் செயலாளர் றிப்கா சபீனை சந்தித்து பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வீதி அபிவிருத்திப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.உலக வங்கியின் நிதி உதவியோடு கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வீதி அபிவிருத்திகள் தொடர்பாகவும், அது தொடர்பில் அப்பிரதேச மக்கள் முன்வைத்துள்ள ‘வீதியானது இருபக்க வடிகான்களைக் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை தொடர்பிலும் இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாயல் (அல் அக்ஸா பள்ளிவாயல்) வீதி மற்றும் புதிய காத்தான்குடி பெண்கள் சந்தை வீதி ஆகிய வீதிகளை பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டதுடன் பிரதேச மக்களுடனும் கலந்துரையாடினார். அண்மையில் இப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நேரில் சந்தித்து இந்த வீதி அபிவிருத்தி பணி தொடர்பில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.இங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர், இந்த விடயங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபை, உலக வங்கி பிரதிநிதிகள் மற்றும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வரவுள்ளதாகவும் மக்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு, தரமான முறையில் இந்த வீதியினை அபிவிருத்தி செய்வதை தாம் உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார்.இந்த விஜயத்தில் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.