• Sep 27 2024

திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்கும் ஜனாதிபதி அநுர - ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Chithra / Sep 26th 2024, 11:50 am
image

Advertisement


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு வாக்களித்த ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கு தயங்க போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அமைச்சு செயலாளர்களை நியமிக்கும் போது திறமையற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அதிகாரிகள் புதிய அரசாங்கத்திலும் செயலாளர்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் அமைச்சுகளை நிர்வாகம் செய்வதற்காக அமைச்சுக்களின் செயலாளர்களை இவ்வாறு நியமித்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பில் திருப்திக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு நிர்வாகத்தின் பிரதான செயலாளருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும் அவர் மேல் மாகாண பிரதான செயலாளராக கடமை ஆற்றிய காலத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த கணக்காய்வு அறிக்கைகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவர் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படுவது பிழையானது என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள முரண்பாடு தொடர்பில் பாரதூரமான பிரச்சினைகள் நிலவி வருவதாகவும் இதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்கும் ஜனாதிபதி அநுர - ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு வாக்களித்த ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கு தயங்க போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசாங்கம் அமைச்சு செயலாளர்களை நியமிக்கும் போது திறமையற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.குறிப்பாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அதிகாரிகள் புதிய அரசாங்கத்திலும் செயலாளர்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.தற்போதைய அரசாங்கம் அமைச்சுகளை நிர்வாகம் செய்வதற்காக அமைச்சுக்களின் செயலாளர்களை இவ்வாறு நியமித்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பில் திருப்திக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அரசு நிர்வாகத்தின் பிரதான செயலாளருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும் அவர் மேல் மாகாண பிரதான செயலாளராக கடமை ஆற்றிய காலத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த கணக்காய்வு அறிக்கைகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.அவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவர் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படுவது பிழையானது என தெரிவித்துள்ளார்.ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள முரண்பாடு தொடர்பில் பாரதூரமான பிரச்சினைகள் நிலவி வருவதாகவும் இதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement