ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மரியாதை அணி வகுப்பு, மரியாதை வேட்டு ஏதுவுமில்லாமல் ஆரவாரமற்ற முறையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
பாராளுமன்றத்தின் பிரதான வாயிலில் இருந்து சபாநாயகர் அசோக ரங்வெல மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தி அவரை சபா மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் கன்னி அமர்விலே கொள்கை பிரகடன உரையை ஜனாதிபதி ஆற்றவுள்ளார்.
இதேவேளை 10ஆவது நாடாளுமன்றத்தில் முதற்கட்ட நியமனங்களின் பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவிதுள்ளார்
அதன்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் அறிவித்தார்.
ஆரவாரமின்றி நாடாளுமன்றுக்கு வருகை தந்தார் ஜனாதிபதி அநுர - ஆரம்பமானது உரை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மரியாதை அணி வகுப்பு, மரியாதை வேட்டு ஏதுவுமில்லாமல் ஆரவாரமற்ற முறையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.பாராளுமன்றத்தின் பிரதான வாயிலில் இருந்து சபாநாயகர் அசோக ரங்வெல மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தி அவரை சபா மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் கன்னி அமர்விலே கொள்கை பிரகடன உரையை ஜனாதிபதி ஆற்றவுள்ளார்.இதேவேளை 10ஆவது நாடாளுமன்றத்தில் முதற்கட்ட நியமனங்களின் பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவிதுள்ளார்அதன்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் அறிவித்தார்.