• Jan 29 2025

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சி.ஐ.டியில் முன்னிலை!

Chithra / Nov 21st 2024, 11:21 am
image


முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று காலை முன்னிலையாகியுள்ளார்.

தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும், முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சபையில் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் அப்போது அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த 11ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சி.ஐ.டியில் முன்னிலை முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று காலை முன்னிலையாகியுள்ளார்.தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.மேலும், முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சபையில் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் அப்போது அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த 11ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement