சாதாரண மக்களுக்கு கிடைக்கப்பெறாத எந்தவொரு சலுகையும் அரசியல்வாதிகளுக்கு கிடைக்கப்பெறாது என்பதுடன் அநுரவின் கூட்டணியில் திருடர்களுக்கு இடமில்லை எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் கணேசன் திலீப்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கொழும்பு வீதியில் முறக்கொட்டான்சேனையில் நேற்றையதினம்(23) தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பணிமனை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அநுர தோழர் எமது நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் எவ்வாறான அரசியல் மாற்றங்களை மக்கள் நலன் சார்நத விடயங்களை முன்னெடுத்து வருகின்றார் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களுக்காகவும் இந்த அரசாங்கத்தை சீர்படுத்த வேண்டும் என்ற அர்த்தத்தோடு கூறியிருந்தார்.
முதலில் எங்களுக்கு வாக்களிக்காத மக்களது மனதை நாங்கள் வென்றெடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.நீங்கள் இவ்வளவு காலமும் மோசமானதொரு அரசியல் கலாச்சாரமொன்றினை எதிர்கொண்டு வந்திருப்பீர்கள்.
சாதாரணமாக இங்கே அரசியல் செய்கின்ற பல அரசியல் கட்சிகள் போன்று நாங்கள் அரசியல் செய்யவில்லை.தேசிய மக்கள் சக்தி என்னமாதிரியான அரசியல் செய்கின்றது என்பதனை நான் சொல்ல வேண்டிய கடமைப்பாடு உள்ளது.
எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே பாராளுமன்ற சம்பளத்தை பெறுவதில்லை.யாருமே வாகன அனுமதிப் பத்திரம் பெறுவதில்லை.மக்களது வரிப்பணத்தில் இருந்து பெறப்படும் அரசின் சலுகைகள் எதனையும் அனுபவிப்பதில்லை.
இவை அனைத்தையும் பெறாமலே நாங்கள் மக்களுக்கான அரசியலை செய்கின்றோம்.எங்களிடம் பார் லைசன் இல்லை.மணல் பேமிற் இல்லை,சட்ட விரோத தொழில்கள் இல்லை,கொள்ளை,கப்பம் போன்ற வன்முறை கலாச்சாரங்கள் எங்களிடம் கிடையாது.மக்களுக்காக களத்திலே உழைக்கின்றவர்கள்.ஆனால் மற்றைய அரசியல்வாதிகள் என்ன செய்கின்றனர்.
அரசியலை தொழிலாக செய்கின்றனர்.உங்களிடம் வாக்குகளை பெற்றுக்கொண்டு பாராளுமன்றம் செல்கின்றனர்.சம்பளம் பெறுகின்றார்கள்.வாகன இறக்குமதி அனுமதிபத்திரம் பெற்று விற்கின்றனர்.பாதை போடுகின்றார்கள் கொமிஷன் அடிக்கின்றார்கள்.அவர்கள் களவெடுக்கின்ற அளவிற்கு அதன் சுமை நம் எல்லோரிடமும் தாக்கம் செலுத்தும்.
பொருட்களின் விலை கட்டணம் அதிகரிக்கப்படும்,மின்சாரம்,அத்தியாவசிய சேவை விடயங்கள் அனைத்திலும் தாக்கத்தை செலுத்தும்.நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த கள்வர்கள் திருடுகின்ற பணத்தை அறவிடுகிறார்கள்.
இந்த கேவலமான கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்தான் இருக்கிறது.அத்துடன் தேர்தல் காலங்களிலேதான் அவர்களது அரசியல் உள்ளது.ஆனால் தேசிய மக்கள் சக்தி தேர்தல் அரசியல் செய்கின்ற இயக்கமல்ல.
தேர்தல் அரசியலையையும் அரசியல் கட்சி என்ற வகையில் செய்தாலும் மக்களுக்கான சமூக அரசியலை தொடர்சியாக முன்னெடுத்து போகின்ற அரசியல் இயக்கம்.நாங்கள் அப்படித்தான் தொடர்ச்சியாக முன்னெடுத்துப் போகின்றோம்.
நாங்கள் இந்த மக்களுடன் நன்கு பரிட்சையமானவர்கள்.இது தான் எங்களுக்கும் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்.
வருகின்ற பாராளுமன்றம் பொது தேர்தல் மிகவும் முக்கியமானது.பலர் தங்களது அரசியல் வாழ்விற்கு முடிவுகட்டியுள்ளனர்.
பலர் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்கள்.பலர் ஓய்வு பெற்றுள்ளார்கள்.சிலர் அரசியல் தேவையில்லை என்று வீட்டுக்கு சென்றுள்ளனர்.
ஏனென்றால் இனி அரசியலில் இருந்து பணம் சம்பாதிக்கமுடியாது என்பதாகும்.
அரசியலை வியாபாரம் செய்யமுடியாது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த சலுகையும் இல்லை.
5 வருடம் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து சாகும் வரைக்கும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கின்றீர்கள்.
ஆனால் ஒரு அரச உத்தியோகத்தர் 55 வருடம் தொடக்கம் 60 வருடங்கள் கடந்த பின்னரே தமது ஓய்வூதியத்தினை பெற்றுக்கொள்கிறார்.
எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது.தேவையில்லாத செலவீனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
சாதாரண மக்களுக்கு கிடைக்கப்பெறாத எந்தவொரு சலுகையும் அரசியல்வாதிகளுக்கு கிடைக்கப்பெறாது.
சில முன்னாள் அமைச்சர்கள்,அரசியல்வாதிகள் உங்களிடம் வருவார்கள் தேர்தலிலே வென்றுவிட்டு அனுரவுடன் கூட்டணி அமைத்துவிட்டு அமைச்சுப் பதவி எடுப்போம் என்று கூறுவார்கள்.
எந்த கள்வர்களையும் எமது ஜனாதிபதி சேர்த்துக்கொள்ளப்போவதில்லை என்று முன்னமே கூறுகின்றோம்.
இவர்களுக்கு எங்களிடம் இடமில்லை.அநுரவிற்கும் மக்களுக்கும்தான் நேரடியான தொடர்பு.அனுரகுமாரதிசநாயக்கவின் தலைவர்கள களத்திலே இருக்கின்றார்கள்.அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள் நாங்கள் நல்லதொரு நாட்டினை கட்டியெழுப்புவோம் என்றார்.
திருடர்களை இணைத்து கூட்டணி அமைக்க ஜனாதிபதி அநுர தயாரில்லை- திலீப்குமார் சுட்டிக்காட்டு. சாதாரண மக்களுக்கு கிடைக்கப்பெறாத எந்தவொரு சலுகையும் அரசியல்வாதிகளுக்கு கிடைக்கப்பெறாது என்பதுடன் அநுரவின் கூட்டணியில் திருடர்களுக்கு இடமில்லை எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் கணேசன் திலீப்குமார் தெரிவித்தார்.மட்டக்களப்பு கொழும்பு வீதியில் முறக்கொட்டான்சேனையில் நேற்றையதினம்(23) தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பணிமனை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அநுர தோழர் எமது நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் எவ்வாறான அரசியல் மாற்றங்களை மக்கள் நலன் சார்நத விடயங்களை முன்னெடுத்து வருகின்றார் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களுக்காகவும் இந்த அரசாங்கத்தை சீர்படுத்த வேண்டும் என்ற அர்த்தத்தோடு கூறியிருந்தார்.முதலில் எங்களுக்கு வாக்களிக்காத மக்களது மனதை நாங்கள் வென்றெடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.நீங்கள் இவ்வளவு காலமும் மோசமானதொரு அரசியல் கலாச்சாரமொன்றினை எதிர்கொண்டு வந்திருப்பீர்கள்.சாதாரணமாக இங்கே அரசியல் செய்கின்ற பல அரசியல் கட்சிகள் போன்று நாங்கள் அரசியல் செய்யவில்லை.தேசிய மக்கள் சக்தி என்னமாதிரியான அரசியல் செய்கின்றது என்பதனை நான் சொல்ல வேண்டிய கடமைப்பாடு உள்ளது.எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே பாராளுமன்ற சம்பளத்தை பெறுவதில்லை.யாருமே வாகன அனுமதிப் பத்திரம் பெறுவதில்லை.மக்களது வரிப்பணத்தில் இருந்து பெறப்படும் அரசின் சலுகைகள் எதனையும் அனுபவிப்பதில்லை.இவை அனைத்தையும் பெறாமலே நாங்கள் மக்களுக்கான அரசியலை செய்கின்றோம்.எங்களிடம் பார் லைசன் இல்லை.மணல் பேமிற் இல்லை,சட்ட விரோத தொழில்கள் இல்லை,கொள்ளை,கப்பம் போன்ற வன்முறை கலாச்சாரங்கள் எங்களிடம் கிடையாது.மக்களுக்காக களத்திலே உழைக்கின்றவர்கள்.ஆனால் மற்றைய அரசியல்வாதிகள் என்ன செய்கின்றனர்.அரசியலை தொழிலாக செய்கின்றனர்.உங்களிடம் வாக்குகளை பெற்றுக்கொண்டு பாராளுமன்றம் செல்கின்றனர்.சம்பளம் பெறுகின்றார்கள்.வாகன இறக்குமதி அனுமதிபத்திரம் பெற்று விற்கின்றனர்.பாதை போடுகின்றார்கள் கொமிஷன் அடிக்கின்றார்கள்.அவர்கள் களவெடுக்கின்ற அளவிற்கு அதன் சுமை நம் எல்லோரிடமும் தாக்கம் செலுத்தும்.பொருட்களின் விலை கட்டணம் அதிகரிக்கப்படும்,மின்சாரம்,அத்தியாவசிய சேவை விடயங்கள் அனைத்திலும் தாக்கத்தை செலுத்தும்.நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த கள்வர்கள் திருடுகின்ற பணத்தை அறவிடுகிறார்கள்.இந்த கேவலமான கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்தான் இருக்கிறது.அத்துடன் தேர்தல் காலங்களிலேதான் அவர்களது அரசியல் உள்ளது.ஆனால் தேசிய மக்கள் சக்தி தேர்தல் அரசியல் செய்கின்ற இயக்கமல்ல.தேர்தல் அரசியலையையும் அரசியல் கட்சி என்ற வகையில் செய்தாலும் மக்களுக்கான சமூக அரசியலை தொடர்சியாக முன்னெடுத்து போகின்ற அரசியல் இயக்கம்.நாங்கள் அப்படித்தான் தொடர்ச்சியாக முன்னெடுத்துப் போகின்றோம்.நாங்கள் இந்த மக்களுடன் நன்கு பரிட்சையமானவர்கள்.இது தான் எங்களுக்கும் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்.வருகின்ற பாராளுமன்றம் பொது தேர்தல் மிகவும் முக்கியமானது.பலர் தங்களது அரசியல் வாழ்விற்கு முடிவுகட்டியுள்ளனர்.பலர் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்கள்.பலர் ஓய்வு பெற்றுள்ளார்கள்.சிலர் அரசியல் தேவையில்லை என்று வீட்டுக்கு சென்றுள்ளனர்.ஏனென்றால் இனி அரசியலில் இருந்து பணம் சம்பாதிக்கமுடியாது என்பதாகும்.அரசியலை வியாபாரம் செய்யமுடியாது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த சலுகையும் இல்லை.5 வருடம் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து சாகும் வரைக்கும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கின்றீர்கள்.ஆனால் ஒரு அரச உத்தியோகத்தர் 55 வருடம் தொடக்கம் 60 வருடங்கள் கடந்த பின்னரே தமது ஓய்வூதியத்தினை பெற்றுக்கொள்கிறார்.எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது.தேவையில்லாத செலவீனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.சாதாரண மக்களுக்கு கிடைக்கப்பெறாத எந்தவொரு சலுகையும் அரசியல்வாதிகளுக்கு கிடைக்கப்பெறாது.சில முன்னாள் அமைச்சர்கள்,அரசியல்வாதிகள் உங்களிடம் வருவார்கள் தேர்தலிலே வென்றுவிட்டு அனுரவுடன் கூட்டணி அமைத்துவிட்டு அமைச்சுப் பதவி எடுப்போம் என்று கூறுவார்கள்.எந்த கள்வர்களையும் எமது ஜனாதிபதி சேர்த்துக்கொள்ளப்போவதில்லை என்று முன்னமே கூறுகின்றோம்.இவர்களுக்கு எங்களிடம் இடமில்லை.அநுரவிற்கும் மக்களுக்கும்தான் நேரடியான தொடர்பு.அனுரகுமாரதிசநாயக்கவின் தலைவர்கள களத்திலே இருக்கின்றார்கள்.அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள் நாங்கள் நல்லதொரு நாட்டினை கட்டியெழுப்புவோம் என்றார்.