• Oct 02 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடு திரும்பினார்!

shanuja / Oct 1st 2025, 11:19 am
image

ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை (10) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.


ஜப்பானுக்கான விஜயத்துக்கு முன்னர், ஜனாதிபதி அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.



வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பல சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஜனாதிபதியுடன் பயணித்திருந்தனர்.


இந்தக் குழுவினர் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-403 மூலம் இன்று காலை 9:30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடு திரும்பினார் ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை (10) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.ஜப்பானுக்கான விஜயத்துக்கு முன்னர், ஜனாதிபதி அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பல சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஜனாதிபதியுடன் பயணித்திருந்தனர்.இந்தக் குழுவினர் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-403 மூலம் இன்று காலை 9:30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement