• Apr 13 2025

மே மாதம் வியட்நாம் பறக்கும் ஜனாதிபதி அநுர!

Chithra / Apr 12th 2025, 9:44 am
image


சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வியட்நாம் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது. 

'உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு' என்ற தொணிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர்.

ஹோ சி மின் நகரில் அமைந்துள்ள வியட்நாம் பௌத்த நிலையத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினம் மற்றும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் சுமார் 1,000 சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2,000 பேர் வரை பங்கேற்க உள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

மே மாதம் வியட்நாம் பறக்கும் ஜனாதிபதி அநுர சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வியட்நாம் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது. 'உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு' என்ற தொணிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர்.ஹோ சி மின் நகரில் அமைந்துள்ள வியட்நாம் பௌத்த நிலையத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினம் மற்றும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் சுமார் 1,000 சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2,000 பேர் வரை பங்கேற்க உள்ளனர்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement