• Apr 13 2025

சித்திரைப் புத்தாண்டுக்குப்பின் அமைச்சரவையில் மாற்றமா? வெளியான தகவல்

Chithra / Apr 12th 2025, 9:32 am
image

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்களை தற்போதைய நாட்களில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா வழிநடத்தி வருவதாக தெரியவருகின்றது. 

தற்போது கூடுதலான அமைச்சுப் பொறுப்புகளை வைத்திருக்கும் அமைச்சர்களின் பொறுப்புகள் புதியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. 

அதன் பிரகாரம் அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போதைக்கு பிரதி அமைச்சராக இருக்கின்ற இளம் அரசியல்வாதியொருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சித்திரைப் புத்தாண்டுக்குப்பின் அமைச்சரவையில் மாற்றமா வெளியான தகவல்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்களை தற்போதைய நாட்களில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா வழிநடத்தி வருவதாக தெரியவருகின்றது. தற்போது கூடுதலான அமைச்சுப் பொறுப்புகளை வைத்திருக்கும் அமைச்சர்களின் பொறுப்புகள் புதியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. அதன் பிரகாரம் அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படவுள்ளது.தற்போதைக்கு பிரதி அமைச்சராக இருக்கின்ற இளம் அரசியல்வாதியொருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement