இலங்கையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரிசி வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சந்தையில் அதிகரித்துள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பில் அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அரசின் தீர்மானத்துக்கு இணங்க முடியாவிடின், அதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2 தடவைகள் அரிசி ஆலை உரிமையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
எனினும், சந்தையில் அரிசி தட்டுப்பாடு மற்றும் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை அரிசி வர்த்தகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
அரிசி தொடர்பான அரசின் தீர்மானத்துக்கு இணங்காவிடின் கடும் நடவடிக்கை- ஜனாதிபதி அநுர எச்சரிக்கை இலங்கையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரிசி வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சந்தையில் அதிகரித்துள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பில் அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். அரசின் தீர்மானத்துக்கு இணங்க முடியாவிடின், அதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2 தடவைகள் அரிசி ஆலை உரிமையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். எனினும், சந்தையில் அரிசி தட்டுப்பாடு மற்றும் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை அரிசி வர்த்தகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.