• Nov 15 2024

புத்தாண்டில் கடமைகளை ஆரம்பித்த ஜனாதிபதி..! - அமைச்சர்கள் மற்றும் ஊழியர்களுடன் தேநீர் விருந்து

Chithra / Jan 1st 2024, 2:05 pm
image

 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் தனது கடமைகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர், ,இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அவரது ஊழியர்களைச் சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய வருட கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, தேசிய கொடியை ஏற்றிவைத்த பின்னர், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரச சேவை உறுதிமொழியை எழுத்துக்கொண்டனர்.

தனது ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு 2024 இல் நாட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு நம்பிக்கையான மனப்பான்மையுடனும் உறுதியுடனும் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் மற்றும் ஊழியர்களுடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.

புத்தாண்டில் கடமைகளை ஆரம்பித்த ஜனாதிபதி. - அமைச்சர்கள் மற்றும் ஊழியர்களுடன் தேநீர் விருந்து  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் தனது கடமைகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர், ,இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அவரது ஊழியர்களைச் சந்தித்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய வருட கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, தேசிய கொடியை ஏற்றிவைத்த பின்னர், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரச சேவை உறுதிமொழியை எழுத்துக்கொண்டனர்.தனது ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு 2024 இல் நாட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு நம்பிக்கையான மனப்பான்மையுடனும் உறுதியுடனும் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.இதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் மற்றும் ஊழியர்களுடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement