எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் சகல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கேடந்த செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசும் போது அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த வாரம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது எமது பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், ஏனைய பிரதேசங்களிலும் மக்களை இடர்களிலிருந்து காப்பாற்றுவதற்காக பொறுப்புடன் செயற்பட்ட உறுப்பினர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் நிவாரணப் பொருட்களை வழங்கியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது பிரதேசத்தில் 645 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, பலர் தேயிலைத் தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். பிரதேச சபையில் தேவையான வளங்கள் வசதிகள் இல்லாத நிலையிலும். கூடுமான வரை மீட்புப் பணிகளை செய்து கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்திருந்தோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் எம். ராமேஸ்வரன் ஆகியோர் உலர் உணவுப் பொருட்களை வழங்கியிருந்தார்கள். மனிதாபிமான உதவிகளும் கிடைத்திருந்தன.
அனர்த்தங்கள் நேரும் போது வாகன வசதிகள் போன்ற பல அத்தியாவசிய வளங்கள் இல்லாதுள்ளதை ஜனாதிபதியின் நுவரெலியா விஜயத்தின் போது நாங்கள் அவரது கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தோம். எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் சகல வசதிகளும் செய்துக் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அதேபோல், எமது பிரதேசத்தில் காணப்பாடும் ஆபத்தான மரங்களை வெட்டுவதற்கான அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டுமெனவும் கேட்டுள்ளோம்.
மேலும், அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்துக்கு அமைய தோட்டங்களுக்கும் வீடமைப்பு மற்றும் நட்ட ஈடுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வீடமைப்புக்கு விபரங்களை சேகரிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தேவைப்படுகின்றது.
முழு இலங்கைக்கும் 60 அதிகாரிகள் உள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்துக்கு 4 அதிகாரிகள் மாத்திரமே இருக்கின்றார்கள். எனவே, வெளியிடங்களில் உள்ளவ ர்களையும், ஓய்வு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு நல்லுள்ளம் படைத்தவ்ர்களின் அனுசரணையோடு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் உடுதுணிகளையும் வழங்கவும் பிரதேச சபை உறுப்பினர்களின் நலன்புரி நிதியத்தின் ஊடாக பெண்களுக்கு உதவவும், மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான நிகழ்வை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தம் என்பது எதிர்பாராமல் நடக்கும் ஒன்றாகும். இதில் இன, மத, மொழி பேதம் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டியது எமது கடமையாகும். அந்த வகையில் மீண்டு வரும் இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் நாம் அனைவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக கைகோர்த்து செயற்படுவோம். -என்றார்.
சகல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் வசதிகளை செய்துகொடுக்க ஜனாதிபதி உறுதி எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் சகல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார். கேடந்த செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசும் போது அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,கடந்த வாரம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது எமது பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், ஏனைய பிரதேசங்களிலும் மக்களை இடர்களிலிருந்து காப்பாற்றுவதற்காக பொறுப்புடன் செயற்பட்ட உறுப்பினர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் நிவாரணப் பொருட்களை வழங்கியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.எமது பிரதேசத்தில் 645 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, பலர் தேயிலைத் தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். பிரதேச சபையில் தேவையான வளங்கள் வசதிகள் இல்லாத நிலையிலும். கூடுமான வரை மீட்புப் பணிகளை செய்து கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்திருந்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் எம். ராமேஸ்வரன் ஆகியோர் உலர் உணவுப் பொருட்களை வழங்கியிருந்தார்கள். மனிதாபிமான உதவிகளும் கிடைத்திருந்தன.அனர்த்தங்கள் நேரும் போது வாகன வசதிகள் போன்ற பல அத்தியாவசிய வளங்கள் இல்லாதுள்ளதை ஜனாதிபதியின் நுவரெலியா விஜயத்தின் போது நாங்கள் அவரது கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தோம். எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் சகல வசதிகளும் செய்துக் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அதேபோல், எமது பிரதேசத்தில் காணப்பாடும் ஆபத்தான மரங்களை வெட்டுவதற்கான அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டுமெனவும் கேட்டுள்ளோம்.மேலும், அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்துக்கு அமைய தோட்டங்களுக்கும் வீடமைப்பு மற்றும் நட்ட ஈடுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வீடமைப்புக்கு விபரங்களை சேகரிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தேவைப்படுகின்றது. முழு இலங்கைக்கும் 60 அதிகாரிகள் உள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்துக்கு 4 அதிகாரிகள் மாத்திரமே இருக்கின்றார்கள். எனவே, வெளியிடங்களில் உள்ளவ ர்களையும், ஓய்வு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு நல்லுள்ளம் படைத்தவ்ர்களின் அனுசரணையோடு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் உடுதுணிகளையும் வழங்கவும் பிரதேச சபை உறுப்பினர்களின் நலன்புரி நிதியத்தின் ஊடாக பெண்களுக்கு உதவவும், மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான நிகழ்வை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இயற்கை அனர்த்தம் என்பது எதிர்பாராமல் நடக்கும் ஒன்றாகும். இதில் இன, மத, மொழி பேதம் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டியது எமது கடமையாகும். அந்த வகையில் மீண்டு வரும் இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் நாம் அனைவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக கைகோர்த்து செயற்படுவோம். -என்றார்.