• Jan 17 2025

நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Chithra / Jan 17th 2025, 2:10 pm
image


எதிர்வரும் பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் சதொச நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலைகளை புதுப்பிப்பதற்கு தேவையான, முப்படைகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாத இறுதிக்குள், பெரும்போக நெல் கொள்முதல் நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்பு களஞ்சியசாலைகளின் புதுப்பித்தல் பணிகளை நிறைவுறுத்த தேவையான உதவிகளை வழங்கவும் அவற்றிற்கு தேவையான பாதுகாப்பை வழங்கவும் பாதுகாப்பு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது

நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் எதிர்வரும் பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் சதொச நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலைகளை புதுப்பிப்பதற்கு தேவையான, முப்படைகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள், பெரும்போக நெல் கொள்முதல் நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்பு களஞ்சியசாலைகளின் புதுப்பித்தல் பணிகளை நிறைவுறுத்த தேவையான உதவிகளை வழங்கவும் அவற்றிற்கு தேவையான பாதுகாப்பை வழங்கவும் பாதுகாப்பு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement