ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலது பக்கர் சிக்கலைபோட்டுவிட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்தும் ஒருவர்,அவர் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்போகின்றேன் என்று சொல்லும் போதே சந்தேகம் ஏற்படுகின்றது பாராளுமன்றத்தை அதற்கு முன்பாக கலைத்து விடுகின்றாறோ என்று என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை உறுப்பினர்களை சந்தித்தார்.
இன்று மாலை மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தொகுதிக்கிளை கூட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்ப மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு நடைபெறுவதையொட்டி தொகுதிக்கிளைகளின் கருத்துகளை பெறுவதற்கான கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டாலும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவு கோரும் வகையிலான கூட்டமாக நடைபெற்றதாக கட்சி தகவல்கள் தெரிவித்தன.
இந்த கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தார்.
வலது பக்க சிக்னலை போட்டு விட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்தும் ஒருவர்தான் ஜனாதிபதி –சுமந்திரன் எம்.பி.தெரிவிப்பு. Samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலது பக்கர் சிக்கலைபோட்டுவிட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்தும் ஒருவர்,அவர் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்போகின்றேன் என்று சொல்லும் போதே சந்தேகம் ஏற்படுகின்றது பாராளுமன்றத்தை அதற்கு முன்பாக கலைத்து விடுகின்றாறோ என்று என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை உறுப்பினர்களை சந்தித்தார்.இன்று மாலை மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தொகுதிக்கிளை கூட்டம் நடைபெற்றது.மட்டக்களப்ப மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு நடைபெறுவதையொட்டி தொகுதிக்கிளைகளின் கருத்துகளை பெறுவதற்கான கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டாலும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவு கோரும் வகையிலான கூட்டமாக நடைபெற்றதாக கட்சி தகவல்கள் தெரிவித்தன.இந்த கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தார்.