கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள ஸ்ரீ நாத விகாரை பூமியில் ஆரம்பமான சிரசுக்கு எண்ணெய் வைக்கும் அரச மஹோற்சவத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்றுள்ளார்.
சிங்கள புத்தாண்டு சுபநேர அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, சிரசுக்கு எண்ணெய் வைப்பதற்கான சுபநேரம் இன்று (15) முற்பகல் 6.55 மணிக்கு நடைபெற்றது.
சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மற்றும் அஸ்கிரி ஆகிய இரு பிரிவுகளின் மகா நாயக்க தேரர்களின் வழிகாட்டலுடன், கலாசார முறைப்படி நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஆசீர்வாதத்தையும் பெறுக்கொண்டார்.
இதேவேளை இன்று (15) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு ஆசி பெற்றார்.
சிரசுக்கு எண்ணெய் வைக்கும் அரச மஹோற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள ஸ்ரீ நாத விகாரை பூமியில் ஆரம்பமான சிரசுக்கு எண்ணெய் வைக்கும் அரச மஹோற்சவத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்றுள்ளார். சிங்கள புத்தாண்டு சுபநேர அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, சிரசுக்கு எண்ணெய் வைப்பதற்கான சுபநேரம் இன்று (15) முற்பகல் 6.55 மணிக்கு நடைபெற்றது. சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மற்றும் அஸ்கிரி ஆகிய இரு பிரிவுகளின் மகா நாயக்க தேரர்களின் வழிகாட்டலுடன், கலாசார முறைப்படி நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஆசீர்வாதத்தையும் பெறுக்கொண்டார்.இதேவேளை இன்று (15) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு ஆசி பெற்றார்.