• Jun 26 2024

பெருந்தொற்று காலத்தில் பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட உடல்கள் - சபையில் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில்

Chithra / Jun 18th 2024, 11:22 am
image

Advertisement


கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

நடந்த சம்பவங்களிற்கு நாடாளுமன்றம் மன்னிப்பு கோரவிரும்புகின்றது என ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும் வேதனை காணப்பட்டது.

குறிப்பாக முஸ்லீம்கள் மத்தியில், அதேவேளை இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்களும் வேதனையை அனுபவித்தனர்.

அவ்வேளை இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு உடல்களை தகனம் செய்யவேண்டும் என பரிந்துரைத்தது, உயர்நீதிமன்றமும் இதனை அங்கீகரித்தது.

ஆகவே அரசாங்கம் அதனை பின்பற்றவேண்டிய நிலைமை காணப்பட்டது.வேறுவழியிருக்கவில்லை.

உடல்களை தகனம் செய்வதற்கான உரிமை அடக்கம் செய்வதற்கான உரிமை ஒருவர் தனது உடல்களை மருத்துவநிலையங்களிற்கு வழங்குவதற்கான உரிமை ஆகியவற்றை உறுதி செய்யும் சட்டத்தை தனது அரசாங்கம் கொண்டுவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று காலத்தில் பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட உடல்கள் - சபையில் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.நடந்த சம்பவங்களிற்கு நாடாளுமன்றம் மன்னிப்பு கோரவிரும்புகின்றது என ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார்.கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும் வேதனை காணப்பட்டது.குறிப்பாக முஸ்லீம்கள் மத்தியில், அதேவேளை இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்களும் வேதனையை அனுபவித்தனர்.அவ்வேளை இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு உடல்களை தகனம் செய்யவேண்டும் என பரிந்துரைத்தது, உயர்நீதிமன்றமும் இதனை அங்கீகரித்தது.ஆகவே அரசாங்கம் அதனை பின்பற்றவேண்டிய நிலைமை காணப்பட்டது.வேறுவழியிருக்கவில்லை.உடல்களை தகனம் செய்வதற்கான உரிமை அடக்கம் செய்வதற்கான உரிமை ஒருவர் தனது உடல்களை மருத்துவநிலையங்களிற்கு வழங்குவதற்கான உரிமை ஆகியவற்றை உறுதி செய்யும் சட்டத்தை தனது அரசாங்கம் கொண்டுவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement