• Nov 22 2024

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்..!

Chithra / Feb 9th 2024, 11:06 am
image

 

மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரதமர் றொஜர் குக் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை பேர்த்தில் சந்தித்தார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம், சுற்றுலா மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற துறைகளில் அரசாங்கத்திற்கு உதவ விரும்புவதாக சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்து சமுத்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (08) அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார்.

இன்றும் நாளையும் நடைபெறவுள்ள 07ஆவது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கிய உரையை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்.  மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரதமர் றொஜர் குக் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை பேர்த்தில் சந்தித்தார்.இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.காலநிலை மாற்றம், சுற்றுலா மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற துறைகளில் அரசாங்கத்திற்கு உதவ விரும்புவதாக சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்து சமுத்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (08) அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார்.இன்றும் நாளையும் நடைபெறவுள்ள 07ஆவது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கிய உரையை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement