• Nov 25 2024

ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி - அதிர்ச்சியில் ஜனாதிபதி ரணில்..!

Chithra / Jul 14th 2024, 10:00 am
image

 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சி தெரிவித்ததுடன், அவர் பாதுகாப்பாக இருப்பதாக அறிந்து நிம்மதியடைவதாக தெரிவித்துள்ளார்.

அரசியலில் இலங்கையர்களும் இவ்வாறான வன்முறைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி - அதிர்ச்சியில் ஜனாதிபதி ரணில்.  அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சி தெரிவித்ததுடன், அவர் பாதுகாப்பாக இருப்பதாக அறிந்து நிம்மதியடைவதாக தெரிவித்துள்ளார்.அரசியலில் இலங்கையர்களும் இவ்வாறான வன்முறைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.இதேவேளை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement