• Nov 23 2024

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் வலிகளை வெளிப்படுத்தி மக்களின் அனுதாபத்தைப் பெற ஜனாதிபதி முயற்சி- கின்ஸ் நெல்சன்

Sharmi / Oct 8th 2024, 10:58 pm
image

நாட்டில் மோசடி மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதாக தற்போதைய ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் அறிவித்திருந்த போதிலும் இதுவரையில் அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்தார்.

 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில்  இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் இவ்வாறு தெரிவித்தார்.

“தற்போதைய அரசாங்கம் சொன்னதைச் செய்யாத அரசாக மாறிவிட்டது. அதனை இன்று நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அண்மையில் ஜனாதிபதி கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு விஜயம் செய்தார்.

அங்கு, கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்குச் சென்று ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் வலிகளை வெளிப்படுத்தி மக்களின் அனுதாபத்தைப் பெற ஜனாதிபதி முயற்சிப்பதாகத் தெரிகிறது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பல தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச 4 முறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல அறிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக் குழுக்களை நியமித்திருந்தார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த குழுவொன்றை நியமிக்க தயாராகி வருகின்றார்.

இதுபோன்ற குழுக்கள் மீண்டும் தேவைப்படாது.

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய சிலர் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

எனவே, அவர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்துவதே இப்போது செய்ய வேண்டியது. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் அவமானப்படக் கூடாது. என்று மேலும் கருத்து தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் வலிகளை வெளிப்படுத்தி மக்களின் அனுதாபத்தைப் பெற ஜனாதிபதி முயற்சி- கின்ஸ் நெல்சன் நாட்டில் மோசடி மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதாக தற்போதைய ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் அறிவித்திருந்த போதிலும் இதுவரையில் அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில்  இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் இவ்வாறு தெரிவித்தார்.“தற்போதைய அரசாங்கம் சொன்னதைச் செய்யாத அரசாக மாறிவிட்டது. அதனை இன்று நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அண்மையில் ஜனாதிபதி கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு விஜயம் செய்தார். அங்கு, கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்குச் சென்று ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் வலிகளை வெளிப்படுத்தி மக்களின் அனுதாபத்தைப் பெற ஜனாதிபதி முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பல தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச 4 முறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பல அறிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக் குழுக்களை நியமித்திருந்தார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த குழுவொன்றை நியமிக்க தயாராகி வருகின்றார். இதுபோன்ற குழுக்கள் மீண்டும் தேவைப்படாது. ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய சிலர் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. எனவே, அவர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்துவதே இப்போது செய்ய வேண்டியது. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் அவமானப்படக் கூடாது. என்று மேலும் கருத்து தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement