• Dec 04 2024

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பறிபோன வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தரின் உயிர்

Chithra / Oct 9th 2024, 7:33 am
image

 

அரசாங்க வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வெலிகந்த, சுசிரிகமவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய டபிள்யூ.டி.ஜி. அநுர விஜேசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை - வெலிகந்த நகரிலுள்ள அரசாங்க வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் தனது கடமையை முடித்து விட்டு, துப்பாக்கியை கையளிக்கும் முன் அதில் சிக்கிக்கொண்டிருந்த தோட்டா ஒன்றை கழற்றுவதற்காக துப்பாக்கியை தரையில் தட்டியுள்ளார்.

அதன் போது துப்பாக்கி திடீரென செயற்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பறிபோன வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தரின் உயிர்  அரசாங்க வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.வெலிகந்த, சுசிரிகமவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய டபிள்யூ.டி.ஜி. அநுர விஜேசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பொலன்னறுவை - வெலிகந்த நகரிலுள்ள அரசாங்க வங்கி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்றைய தினம் தனது கடமையை முடித்து விட்டு, துப்பாக்கியை கையளிக்கும் முன் அதில் சிக்கிக்கொண்டிருந்த தோட்டா ஒன்றை கழற்றுவதற்காக துப்பாக்கியை தரையில் தட்டியுள்ளார்.அதன் போது துப்பாக்கி திடீரென செயற்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement