• Nov 28 2024

பொலிஸாரின் அடக்கு முறை : மன்னிப்பு கோரிய அதிபர் வில்லியம் ரூட்டோ!

Tamil nila / Jul 7th 2024, 8:46 pm
image

மேற்கு நாடான கென்யாவில் புதிய வரி விப்திப்பு மசோதாவை எதிர்த்து போராடியவர்களிடம் போலிஸார் அடக்குமுறையை கையாண்டதற்காக அந்த நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ மன்னிப்பு கோரினார்.

இது குறித்து X தளத்தில் கெவின் மனோரி என்ற இளைஞர் பொலிஸார் தன்னை கைது செய்த்து குறித்து வெளியிட்ட பதிவுக்கு அளித்த பதிலில் ரூட்டோ இவ்வாறு மன்னிப்பு கோரினார்.

கென்யாவில் அதிகரித்து வரும் விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து கடந்த 2022ம் ஆண்டில் ஆட்சியை பிடித்த ரூட்டோ நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில சீர்திருத்தங்களை அறிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக கூடுதல் வரி விதித்து அவர் தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் 22 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தின் போது பொலிஸார் கடுமையாக நடந்து கொண்டதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது. இறுதியில் அந்த மசோதாவை ரூட்டோ திரும்ப பெற்றார்.


பொலிஸாரின் அடக்கு முறை : மன்னிப்பு கோரிய அதிபர் வில்லியம் ரூட்டோ மேற்கு நாடான கென்யாவில் புதிய வரி விப்திப்பு மசோதாவை எதிர்த்து போராடியவர்களிடம் போலிஸார் அடக்குமுறையை கையாண்டதற்காக அந்த நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ மன்னிப்பு கோரினார்.இது குறித்து X தளத்தில் கெவின் மனோரி என்ற இளைஞர் பொலிஸார் தன்னை கைது செய்த்து குறித்து வெளியிட்ட பதிவுக்கு அளித்த பதிலில் ரூட்டோ இவ்வாறு மன்னிப்பு கோரினார்.கென்யாவில் அதிகரித்து வரும் விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து கடந்த 2022ம் ஆண்டில் ஆட்சியை பிடித்த ரூட்டோ நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில சீர்திருத்தங்களை அறிவித்தார்.அதன் ஒரு பகுதியாக கூடுதல் வரி விதித்து அவர் தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் 22 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தின் போது பொலிஸார் கடுமையாக நடந்து கொண்டதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது. இறுதியில் அந்த மசோதாவை ரூட்டோ திரும்ப பெற்றார்.

Advertisement

Advertisement

Advertisement