• Sep 19 2024

சுப முகூர்த்தத்தில் அறிவிக்கப்படவுள்ள மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்!

Chithra / Aug 6th 2024, 3:49 pm
image

Advertisement

 

பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது நாளைய தினம் சுப முகூர்த்தத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றையதினம்(06) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவால் முன்வைக்கப்படும் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்குதலை ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்திற்குள் மக்களின் விருப்பத்தை வென்றெடுக்கும் திறன் எமது வேட்பாளருக்கு உண்டு.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாட்டை நேசிக்கும் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள். நாட்டை நேசிக்கும் பலர் எம்முடன் கைகோர்ப்பார்கள்.

மேலும், தற்போதுள்ள  அரசாங்கம் ரணிலின் அரசாங்கம் அல்ல, இது நாம் உருவாக்கிய அரசாங்கம், நாங்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் தான் உள்ளோம்.

இது மகிந்த ராஜபக்சவை  முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட அரசாங்கம்.

அத்துடன் பொதுஜன பெரமுனவுக்கு தனிப்பட்ட நபர்களுடன் போட்டி இல்லை. ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவுக்கும்  இடையில் கொள்கைப் பிரச்சினை உள்ளது.  

தற்போதைய ஜனாதிபதி தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர் தான் என்று குறிப்பிட்டுள்ளார். 

சுப முகூர்த்தத்தில் அறிவிக்கப்படவுள்ள மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்  பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது நாளைய தினம் சுப முகூர்த்தத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு இன்றையதினம்(06) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பொதுஜன பெரமுனவால் முன்வைக்கப்படும் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்குதலை ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்திற்குள் மக்களின் விருப்பத்தை வென்றெடுக்கும் திறன் எமது வேட்பாளருக்கு உண்டு.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாட்டை நேசிக்கும் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள். நாட்டை நேசிக்கும் பலர் எம்முடன் கைகோர்ப்பார்கள்.மேலும், தற்போதுள்ள  அரசாங்கம் ரணிலின் அரசாங்கம் அல்ல, இது நாம் உருவாக்கிய அரசாங்கம், நாங்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் தான் உள்ளோம்.இது மகிந்த ராஜபக்சவை  முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட அரசாங்கம்.அத்துடன் பொதுஜன பெரமுனவுக்கு தனிப்பட்ட நபர்களுடன் போட்டி இல்லை. ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவுக்கும்  இடையில் கொள்கைப் பிரச்சினை உள்ளது.  தற்போதைய ஜனாதிபதி தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர் தான் என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement