• Nov 24 2024

ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது - மஹிந்த ஆவேசம்..!

Chithra / Mar 19th 2024, 8:08 am
image


ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும். 

நாட்டில் தற்போது இடைக்கால ஜனாதிபதியின் ஆட்சியே தொடர்கின்றது. 

இடைக்கால ஜனாதிபதி ஒருவருக்கு ஒரு வருடம் மாத்திரம் வழங்கப்பட்டால் போதுமானது. 

தற்போது இந்த கால எல்லை கடந்துள்ளது. 

தற்போதைய நாடாளுமன்றுக்கும் மக்கள் ஆணை இல்லை. எனவே புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றம், உள்ளுராட்சி மன்றங்கள் ஆகியன புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த வருட இறுதிக்குள் இவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது - மஹிந்த ஆவேசம். ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும். நாட்டில் தற்போது இடைக்கால ஜனாதிபதியின் ஆட்சியே தொடர்கின்றது. இடைக்கால ஜனாதிபதி ஒருவருக்கு ஒரு வருடம் மாத்திரம் வழங்கப்பட்டால் போதுமானது. தற்போது இந்த கால எல்லை கடந்துள்ளது. தற்போதைய நாடாளுமன்றுக்கும் மக்கள் ஆணை இல்லை. எனவே புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.நாடாளுமன்றம், உள்ளுராட்சி மன்றங்கள் ஆகியன புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த வருட இறுதிக்குள் இவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement