• Jul 02 2024

ஜனாதிபதி தேர்தல்; மஹிந்த கட்சியின் முடிவுக்காகவே காத்திருக்கும் தம்மிக்க பெரேரா - பிரச்சாரத்தை ஆரம்பிக்கவும் தயார்

Chithra / Jun 30th 2024, 1:11 pm
image

Advertisement

 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முடிவுக்காகவே காத்துக்கொண்டிருக்கின்றேன் என தொழிலதிபரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னதாக எனக்கு பொதுஜன பெரமுன பத்து நிபந்தனைகளை விதித்திருந்த நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது தொடர்பில்  கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கும் தற்போது தயாராகியுள்ளேன். 

இந்தச் சூழலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வேட்பாளராக என்னைப் பெயரிடுவதற்கான தீர்மானத்தினை எடுக்க வேண்டும்.

அந்தத் தீர்மானத்தினை எடுத்து அறிவிப்பதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றேன். தற்போதைய சூழலில் அரசியலமைப்பின் பிரகாரம் ஒகஸ்ட் 20ஆம் திகதி வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.

ஆகவே, இன்னமும் ஐம்பது தினங்கள் தான் எஞ்சியுள்ளன. ஆகவே குறித்த ஐம்பது தினங்களுக்குள் பொதுஜன பெரமுன தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்று கருதுகின்றேன் என்றார்.

மேலும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதற்காக தனது பிரசாரப் பணிகளை ஆரம்பிக்கவும் தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தல்; மஹிந்த கட்சியின் முடிவுக்காகவே காத்திருக்கும் தம்மிக்க பெரேரா - பிரச்சாரத்தை ஆரம்பிக்கவும் தயார்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முடிவுக்காகவே காத்துக்கொண்டிருக்கின்றேன் என தொழிலதிபரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னதாக எனக்கு பொதுஜன பெரமுன பத்து நிபந்தனைகளை விதித்திருந்த நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது தொடர்பில்  கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கும் தற்போது தயாராகியுள்ளேன். இந்தச் சூழலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வேட்பாளராக என்னைப் பெயரிடுவதற்கான தீர்மானத்தினை எடுக்க வேண்டும்.அந்தத் தீர்மானத்தினை எடுத்து அறிவிப்பதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றேன். தற்போதைய சூழலில் அரசியலமைப்பின் பிரகாரம் ஒகஸ்ட் 20ஆம் திகதி வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.ஆகவே, இன்னமும் ஐம்பது தினங்கள் தான் எஞ்சியுள்ளன. ஆகவே குறித்த ஐம்பது தினங்களுக்குள் பொதுஜன பெரமுன தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்று கருதுகின்றேன் என்றார்.மேலும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதற்காக தனது பிரசாரப் பணிகளை ஆரம்பிக்கவும் தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement