• Nov 26 2024

ஜனவரி முதல் ஆரம்பமாகவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை..! ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

Chithra / Dec 31st 2023, 10:30 am
image

 

அரசியலமைப்பின் பிரகாரம், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று முதல் தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் அடிப்படையில் ஒக்டோபர் 16 ஆம் திகதி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. 

அதற்கான பிரதான பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு தற்போது, முன்னாயத்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஜனவரி முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஊடகங்கள் ஊடான விளம்பரங்கள் இன்று முதல் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். என்றும் தெரிவித்துள்ளார்


ஜனவரி முதல் ஆரம்பமாகவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை. ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு  அரசியலமைப்பின் பிரகாரம், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதற்கமைய, இன்று முதல் தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.அரசியலமைப்பின் அடிப்படையில் ஒக்டோபர் 16 ஆம் திகதி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கான பிரதான பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு தற்போது, முன்னாயத்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஜனவரி முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஊடகங்கள் ஊடான விளம்பரங்கள் இன்று முதல் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். என்றும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement