• Apr 16 2026

49 கைதிகளுக்கு விசேட இன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பு!

Chithra / Feb 4th 2026, 10:20 am
image

 

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மொத்தம் 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.


அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமையவே இந்த பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.


அதன்படி, தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் தண்டனைக் காலம் குறைக்கப்படும். அதற்கு மேலதிகமாக, 75,000 ரூபாவுக்கும் குறைவான அபராத பணத்தை செலுத்தாது தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கான மீதமுள்ள தண்டனைக் காலமும் குறைக்கப்படும்.


இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியுள்ள 49 கைதிகளும் இன்றைய தினமே சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

49 கைதிகளுக்கு விசேட இன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பு  78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மொத்தம் 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமையவே இந்த பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.அதன்படி, தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் தண்டனைக் காலம் குறைக்கப்படும். அதற்கு மேலதிகமாக, 75,000 ரூபாவுக்கும் குறைவான அபராத பணத்தை செலுத்தாது தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கான மீதமுள்ள தண்டனைக் காலமும் குறைக்கப்படும்.இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியுள்ள 49 கைதிகளும் இன்றைய தினமே சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement