• Sep 20 2024

ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு - சாதகமாக வர்த்தக சூழல் உருவாக்க பல நடவடிக்கை.! samugammedia

Tamil nila / May 27th 2023, 6:00 pm
image

Advertisement

இலங்கையில் முதலீடு செய்வதற்கு புதிய முதலீட்டாளர்களுக்கான சாதகமான வர்த்தக சூழலை உருவாக்குவதற்கு அண்மைக்காலமாக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் ஜப்பானிய முதலீடுகளுக்கான வாய்ப்புகள்' என்ற தொனிப்பொருளில் டோக்கியோவில் இடம்பெற்ற வர்த்தக வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார்.


இலங்கையின் புதிய முதலீட்டு வாய்ப்புகளை விளக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் திறப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள புதிய சீர்திருத்த வேலைத்திட்டம் மற்றும் அதற்கான தனது அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார்.

அத்தியாவசிய பொருளாதார பங்காளியாக ஜப்பானின் முக்கியத்துவத்தை இலங்கை அங்கீகரித்துள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் பல பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.


இலங்கையின் மூலோபாய இருப்பிடம் மற்றும் திறமையான பணியாளர்கள் ஆகியவை ஜப்பானிய நிறுவனங்களுக்கு பிராந்தியத்தில் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான கதவுகளைத் திறக்கும் என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஜப்பான்-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்துடன் சந்திப்பில் கலந்துகொண்டார்.

ஜப்பானின் டிஜிட்டல் மயமாக்கல் அமைச்சர் டாரோ கோனோவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். 

இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கான வேலைத்திட்டம் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான டிஜிட்டல் மாற்றத் திட்டங்கள் தொடர்பாக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தியிருந்தார்.

ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு - சாதகமாக வர்த்தக சூழல் உருவாக்க பல நடவடிக்கை. samugammedia இலங்கையில் முதலீடு செய்வதற்கு புதிய முதலீட்டாளர்களுக்கான சாதகமான வர்த்தக சூழலை உருவாக்குவதற்கு அண்மைக்காலமாக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் ஜப்பானிய முதலீடுகளுக்கான வாய்ப்புகள்' என்ற தொனிப்பொருளில் டோக்கியோவில் இடம்பெற்ற வர்த்தக வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார்.இலங்கையின் புதிய முதலீட்டு வாய்ப்புகளை விளக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் திறப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள புதிய சீர்திருத்த வேலைத்திட்டம் மற்றும் அதற்கான தனது அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார்.அத்தியாவசிய பொருளாதார பங்காளியாக ஜப்பானின் முக்கியத்துவத்தை இலங்கை அங்கீகரித்துள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் பல பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.இலங்கையின் மூலோபாய இருப்பிடம் மற்றும் திறமையான பணியாளர்கள் ஆகியவை ஜப்பானிய நிறுவனங்களுக்கு பிராந்தியத்தில் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான கதவுகளைத் திறக்கும் என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஜப்பான்-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்துடன் சந்திப்பில் கலந்துகொண்டார்.ஜப்பானின் டிஜிட்டல் மயமாக்கல் அமைச்சர் டாரோ கோனோவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கான வேலைத்திட்டம் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான டிஜிட்டல் மாற்றத் திட்டங்கள் தொடர்பாக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement