• Oct 29 2024

தோல்வியில் முடிவடைந்த ஜனாதிபதியின் IMF பேச்சுவார்த்தை - சஜித் தெரிவிப்பு!

Tamil nila / Oct 28th 2024, 10:58 am
image

Advertisement

துரிதகதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படாவிட்டால், நாடு மீண்டும் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியேற்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

 ஹோமகவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

 அதேநேரம், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்த்தையில் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி மக்களின் வரிச்சுகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார். 

 அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய 2 கலந்துரையாடல்களும் தோல்வியடைந்துள்ளன. 

 அந்த ஒப்பந்தத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ள முடியாது போயுள்ளமையினால், மக்கள் பாரிய வரிச்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

 அத்துடன், புதிய இராஜதந்திர உறவுகளை பேணுவதற்கு, அவருக்கு இருந்த 2 சந்தர்ப்பங்களையும், தற்போதைய ஜனாதிபதி தவறிவிட்டார். 

 எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியான வெற்றியைப் பெறும் சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி மக்களுக்கான சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

 இதுவரை உருவாக்கப்பட்ட தேசியப் பொருளாதாரப் பிரச்சினைக்கு மத்தியில் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கமானது கற்பனை செய்து பார்க்க முடியாத விடயமாக அமைந்துள்ளது. 

 யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இந்த நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்றே தாம் பிரார்த்திப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


தோல்வியில் முடிவடைந்த ஜனாதிபதியின் IMF பேச்சுவார்த்தை - சஜித் தெரிவிப்பு துரிதகதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படாவிட்டால், நாடு மீண்டும் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியேற்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  ஹோமகவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  அதேநேரம், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்த்தையில் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி மக்களின் வரிச்சுகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார்.  அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய 2 கலந்துரையாடல்களும் தோல்வியடைந்துள்ளன.  அந்த ஒப்பந்தத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ள முடியாது போயுள்ளமையினால், மக்கள் பாரிய வரிச்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  அத்துடன், புதிய இராஜதந்திர உறவுகளை பேணுவதற்கு, அவருக்கு இருந்த 2 சந்தர்ப்பங்களையும், தற்போதைய ஜனாதிபதி தவறிவிட்டார்.  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியான வெற்றியைப் பெறும் சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி மக்களுக்கான சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  இதுவரை உருவாக்கப்பட்ட தேசியப் பொருளாதாரப் பிரச்சினைக்கு மத்தியில் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கமானது கற்பனை செய்து பார்க்க முடியாத விடயமாக அமைந்துள்ளது.  யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இந்த நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்றே தாம் பிரார்த்திப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement