திருகோணமலை மாவட்ட சர்வ மத ஒன்றியம் மற்றும் ஜனாதிபதியின் உண்மை நல்லிணக்க பொதுமுறைக்கான கொள்கை பிரிவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம் பெற்றது.
திருகோணமலையிலுள்ள எகெட் கரித்தாஸ் அலுலகத்தில் இன்று (04) அருட்தந்தை டொக்டர் போல் ரொபின்ஷன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
சர்வமத ஒன்றிய செயலாளர் முஹம்மத் றிஸ்மி இந்நிகழ்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் திருகோணமலை மாவட்டத்தில் இன நல்லிணக்கத்திற்கு பாதகமான காரணிகளையும் தெளிவு படுத்தினார்.
பத்திர காளியம்மன் ஆலயத்தின் பிரதம குரு ஸ்ரீ ரவிச்சந்திர குருக்கள் கருத்து தெரிவிக்கையில் எமது மாவட்டத்தில் மூவின மக்களும் சமாதானமாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்கின்றோம். இருந்த பொழுதும் இதனை சீர்குலைப்பதற்கு வேறொரு சக்திகள் இங்கே இயங்குவதனை அவதானிக்க கூடியதாக காணப்பட்டது.
அத்துடன் மௌலவி ஹதியத்துல்லா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய காலப்பகுதியில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இளைஞர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி காணப்படுகின்றனர்.
இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் சட்டம் ஒழுங்கு சீரமைக்கப்பட வேண்டும் அத்துடன் ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் தற்பொழுது இயங்கி வருகின்ற யுத்திய செயற்திட்டம் மேலும் வலுப்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளான கலந்து டொக்டர் அசங்க குணவன்ச மற்றும் டொக்டர் யுவி தங்கராசா மேலும் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன் இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், திருகோணமலை மாவட்ட மறை மாவட்ட ஆயர், திருமலை மாவட்ட சர்வ மதத்தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலைக்கு ஜனாதிபதி செயலக அணியினர் திடீர் விஜயம். samugammedia திருகோணமலை மாவட்ட சர்வ மத ஒன்றியம் மற்றும் ஜனாதிபதியின் உண்மை நல்லிணக்க பொதுமுறைக்கான கொள்கை பிரிவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம் பெற்றது.திருகோணமலையிலுள்ள எகெட் கரித்தாஸ் அலுலகத்தில் இன்று (04) அருட்தந்தை டொக்டர் போல் ரொபின்ஷன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.சர்வமத ஒன்றிய செயலாளர் முஹம்மத் றிஸ்மி இந்நிகழ்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் திருகோணமலை மாவட்டத்தில் இன நல்லிணக்கத்திற்கு பாதகமான காரணிகளையும் தெளிவு படுத்தினார். பத்திர காளியம்மன் ஆலயத்தின் பிரதம குரு ஸ்ரீ ரவிச்சந்திர குருக்கள் கருத்து தெரிவிக்கையில் எமது மாவட்டத்தில் மூவின மக்களும் சமாதானமாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்கின்றோம். இருந்த பொழுதும் இதனை சீர்குலைப்பதற்கு வேறொரு சக்திகள் இங்கே இயங்குவதனை அவதானிக்க கூடியதாக காணப்பட்டது. அத்துடன் மௌலவி ஹதியத்துல்லா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய காலப்பகுதியில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இளைஞர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி காணப்படுகின்றனர்.இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் சட்டம் ஒழுங்கு சீரமைக்கப்பட வேண்டும் அத்துடன் ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் தற்பொழுது இயங்கி வருகின்ற யுத்திய செயற்திட்டம் மேலும் வலுப்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.இந் நிகழ்வில் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளான கலந்து டொக்டர் அசங்க குணவன்ச மற்றும் டொக்டர் யுவி தங்கராசா மேலும் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.அத்துடன் இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், திருகோணமலை மாவட்ட மறை மாவட்ட ஆயர், திருமலை மாவட்ட சர்வ மதத்தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.