• Nov 28 2024

நிலவும் சீரற்ற காலநிலை- புத்தளம் மாவட்டத்தில் 8,582 பேர் பாதிப்பு..!

Sharmi / Aug 22nd 2024, 11:13 am
image

நாட்டில் கடந்த சில வாரங்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப் பிரிவுக்கு உற்பட்ட 65 கிராம சேவகர் பிரிவில் 2418 குடும்பங்களை சேர்ந்த 8582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட அலுவலக கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதில் மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் அதிகமானோர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 16 கிராம சேவகர் பிரிவுகளில் 672 குடும்பங்களைச் சேர்ந்த 2499 பேரும், மஹாவௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 13 கிராம சேவகர் பிரிவுகளில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 938 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 10 கிராம சேவகர் பிரிவுகளில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 280 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 05 கிராம சேவகர் பிரிவுகளில் 66 குடும்பங்களைச் சேர்ந்த 212 பேரும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 04 குடும்பத்தைச் சேர்ந்த 91 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 05 கிராம சேவகர் பிரிவுகளில் 586 குடும்பங்களைச் சேர்ந்த 2059 பேரும், தங்கொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 02 கிராம சேவகர் பிரிவுகளில் 586 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிலாபம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 04 கிராம சேவகர் பிரிவுகளில் 530 குடும்பங்களைச் சேர்ந்த 2070 பேரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிகளில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேரும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவுகளில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேரும் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் இரண்டு தற்காலிக முகாம்களிலும், 50 குடும்பங்களைச் சேர்ந்த 165 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட அலுவலக கடமை நேர அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

த்துடன், புத்தளம் மாவட்டத்தில் வெள்ளநீர் உட்புகுந்தமையினால் வீடு ஒன்றும், 03 வர்த்தக நிலையங்களும் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட அலுவலக கடமைநேர அதிகாரியொருவர் மேலும் தெரிவித்தார்.

நிலவும் சீரற்ற காலநிலை- புத்தளம் மாவட்டத்தில் 8,582 பேர் பாதிப்பு. நாட்டில் கடந்த சில வாரங்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில், தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப் பிரிவுக்கு உற்பட்ட 65 கிராம சேவகர் பிரிவில் 2418 குடும்பங்களை சேர்ந்த 8582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட அலுவலக கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.இதில் மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் அதிகமானோர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.இதேவேளை, மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 16 கிராம சேவகர் பிரிவுகளில் 672 குடும்பங்களைச் சேர்ந்த 2499 பேரும், மஹாவௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 13 கிராம சேவகர் பிரிவுகளில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 938 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 10 கிராம சேவகர் பிரிவுகளில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 280 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், ஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 05 கிராம சேவகர் பிரிவுகளில் 66 குடும்பங்களைச் சேர்ந்த 212 பேரும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 04 குடும்பத்தைச் சேர்ந்த 91 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 05 கிராம சேவகர் பிரிவுகளில் 586 குடும்பங்களைச் சேர்ந்த 2059 பேரும், தங்கொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 02 கிராம சேவகர் பிரிவுகளில் 586 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், சிலாபம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 04 கிராம சேவகர் பிரிவுகளில் 530 குடும்பங்களைச் சேர்ந்த 2070 பேரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிகளில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேரும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவுகளில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேரும் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் இரண்டு தற்காலிக முகாம்களிலும், 50 குடும்பங்களைச் சேர்ந்த 165 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட அலுவலக கடமை நேர அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் வெள்ளநீர் உட்புகுந்தமையினால் வீடு ஒன்றும், 03 வர்த்தக நிலையங்களும் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட அலுவலக கடமைநேர அதிகாரியொருவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement