• May 17 2024

நிலவும் சீரற்ற காலநிலை...! மட்டக்களப்பில் 17531பேர் பாதிப்பு...!அனர்த்தமுகாமைத்துவ நிலையம் அறிவிப்பு...!samugammedia

Sharmi / Jan 10th 2024, 3:39 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரையில் 5461 குடும்பங்களை சேர்ந்த 17531பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் வாகனேரி பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இன்று காலை 8.30மணியளவில் முடிவடைந்த நேரத்தில் வாகனேரி பகுதியில் 174 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் அடை மழைகாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் இடம்பெயர்வும் அதிகரித்து வருகின்றது.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர்  பிரிவில்   புலிபாஞ்சகல் கோஸ்வே மற்றும் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதனால்  இரண்டு படகுசேவைகளை  மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு படகுப் போக்குவரத்து இடம்பெற்று வருகின்றது. .

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில்  ஈரலக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் சித்தாண்டி தொடக்கம் பெருமாவெளி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் அங்கும் இரண்டு படகுசேவைகள் படகு சேவைகள் இடம்பெற்றது.

கோறளைப்பற்று வடக்கு வாகரையில் ஆற்று வெள்ளம் காரணமாக கல்லரிப்பு பிரதேச போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால்  தலா ஒரு உழவு இயந்திர சேவை மற்றும் படகுசேவைகள்  இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்லரிப்பு பிரதேச மக்கள் தொடர்ந்தும் தற்காலிகமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக பட்ச மழையாக 174மில்லி  மீற்றர் வாகனேரியில் பெய்துள்ளதுடன் வாகனேரி குளத்தில் 19.2 அடிக்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், ஆறு அடி வான்கதவு திறக்கப்பட்டு நீர் வெளியேறுகின்றது. .

மயிலம்பாவெளி பிரதேசத்தில் 130மில்லி மீற்றர் மழையும், தும்பங்கேணியில் 112.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

உருகாமம் பகுதியில் 103.9 மில்லி மீற்றர் மழை பெய்து, உருகாமம் குளத்தில் 15.8 அடிக்கு நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், இரண்டரை அடி நீர் வான்பாய்கின்றது.

இதேவேளை உன்னிச்சை பிரதேசத்தில் 102 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதுடன், உன்னிச்சை குளத்தில் 33'0 அடிக்கு நீர் மட்டம் அதிகரித்திருப்பதை அவதானிக்கலாம்.

இது தவிர மட்டக்களப்பில் 99.4 மில்லி மீற்றர் மழையும், கட்டுமுறிவுக்குளத்தில் 98 மில்லி மீற்றர், பாசிக்குடா பகுதியில் 95 மில்லி மீற்றரும் மலை பெய்துள்ளது.

அத்துடன் மாவட்டத்தில் குறைந்த மழை வீழ்ச்சியாக நவகிரி பிரதேசத்தில் 82.5 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதுடன், புணானை அணைக்கட்டின் நீர் 10.8 அடிக்கு உயர்ந்திருப்பதுடன், கிரான் பகுதியில் எவ்வித மழை வீழ்ச்சியும் பதிவாகவில்லை என்றும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  அறிவித்துள்ளது.

தொடர்ந்து மழைபெய்துவருவதன் காரணமாக பிரதான குளங்கள்,தாழ்நிலங்கள்,நீரேந்து பகுதிகளுக்கு அருகில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் தொடர்ந்தும் இடம்பெயரும் நிலை காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒன்பது பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரையில் 5461 குடும்பங்களை சேர்ந்த 17531பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


நிலவும் சீரற்ற காலநிலை. மட்டக்களப்பில் 17531பேர் பாதிப்பு.அனர்த்தமுகாமைத்துவ நிலையம் அறிவிப்பு.samugammedia மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரையில் 5461 குடும்பங்களை சேர்ந்த 17531பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் வாகனேரி பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.இன்று காலை 8.30மணியளவில் முடிவடைந்த நேரத்தில் வாகனேரி பகுதியில் 174 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் அடை மழைகாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் இடம்பெயர்வும் அதிகரித்து வருகின்றது.கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர்  பிரிவில்   புலிபாஞ்சகல் கோஸ்வே மற்றும் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதனால்  இரண்டு படகுசேவைகளை  மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு படகுப் போக்குவரத்து இடம்பெற்று வருகின்றது. .ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில்  ஈரலக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் சித்தாண்டி தொடக்கம் பெருமாவெளி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் அங்கும் இரண்டு படகுசேவைகள் படகு சேவைகள் இடம்பெற்றது.கோறளைப்பற்று வடக்கு வாகரையில் ஆற்று வெள்ளம் காரணமாக கல்லரிப்பு பிரதேச போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால்  தலா ஒரு உழவு இயந்திர சேவை மற்றும் படகுசேவைகள்  இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கல்லரிப்பு பிரதேச மக்கள் தொடர்ந்தும் தற்காலிகமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக பட்ச மழையாக 174மில்லி  மீற்றர் வாகனேரியில் பெய்துள்ளதுடன் வாகனேரி குளத்தில் 19.2 அடிக்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், ஆறு அடி வான்கதவு திறக்கப்பட்டு நீர் வெளியேறுகின்றது. .மயிலம்பாவெளி பிரதேசத்தில் 130மில்லி மீற்றர் மழையும், தும்பங்கேணியில் 112.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.உருகாமம் பகுதியில் 103.9 மில்லி மீற்றர் மழை பெய்து, உருகாமம் குளத்தில் 15.8 அடிக்கு நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், இரண்டரை அடி நீர் வான்பாய்கின்றது.இதேவேளை உன்னிச்சை பிரதேசத்தில் 102 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதுடன், உன்னிச்சை குளத்தில் 33'0 அடிக்கு நீர் மட்டம் அதிகரித்திருப்பதை அவதானிக்கலாம். இது தவிர மட்டக்களப்பில் 99.4 மில்லி மீற்றர் மழையும், கட்டுமுறிவுக்குளத்தில் 98 மில்லி மீற்றர், பாசிக்குடா பகுதியில் 95 மில்லி மீற்றரும் மலை பெய்துள்ளது. அத்துடன் மாவட்டத்தில் குறைந்த மழை வீழ்ச்சியாக நவகிரி பிரதேசத்தில் 82.5 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதுடன், புணானை அணைக்கட்டின் நீர் 10.8 அடிக்கு உயர்ந்திருப்பதுடன், கிரான் பகுதியில் எவ்வித மழை வீழ்ச்சியும் பதிவாகவில்லை என்றும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  அறிவித்துள்ளது.தொடர்ந்து மழைபெய்துவருவதன் காரணமாக பிரதான குளங்கள்,தாழ்நிலங்கள்,நீரேந்து பகுதிகளுக்கு அருகில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் தொடர்ந்தும் இடம்பெயரும் நிலை காணப்படுகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒன்பது பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரையில் 5461 குடும்பங்களை சேர்ந்த 17531பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement