• Apr 04 2025

அரிசிக்கு நிர்ணய விலை - வெளியானது அதிவிசேட வர்த்தமானி

Chithra / Dec 10th 2024, 7:35 am
image


உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி உள்நாட்டு வெள்ளை மற்றும் சிகப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் அதிபட்ச மொத்த விற்பனை விலை 215 ரூபா எனவும் சில்லறை விலை 220 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விற்பனை விலை 225 ரூபா எனவும் சில்லறை விலை 230 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு கீரி சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விற்பனை விலை 255 ரூபா எனவும் சில்லறை விலை 260 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் தொடர்பிலும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பச்சை அரிசி ஒரு கிலோகிராமின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபா எனவும் இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச விலை 220 ரூபா எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபா எனவும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.


அரிசிக்கு நிர்ணய விலை - வெளியானது அதிவிசேட வர்த்தமானி உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி உள்நாட்டு வெள்ளை மற்றும் சிகப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் அதிபட்ச மொத்த விற்பனை விலை 215 ரூபா எனவும் சில்லறை விலை 220 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விற்பனை விலை 225 ரூபா எனவும் சில்லறை விலை 230 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கீரி சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விற்பனை விலை 255 ரூபா எனவும் சில்லறை விலை 260 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் தொடர்பிலும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பச்சை அரிசி ஒரு கிலோகிராமின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபா எனவும் இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச விலை 220 ரூபா எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபா எனவும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement