• Apr 02 2025

கிளிநொச்சியில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி

Chithra / Dec 10th 2024, 7:39 am
image

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும் நாளைமறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டப் பேரணி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு 362 மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும், 174 சில்லறை மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழிருந்த நிதி அமைச்சின் மூலமாக வழங்கப்பட்டன என்று அண்மையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்ட வாரியாக கிளிநொச்சிக்கே அதிகமான மதுபானசாலைக்கான (16) அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும் நாளைமறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டப் பேரணி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு 362 மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும், 174 சில்லறை மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழிருந்த நிதி அமைச்சின் மூலமாக வழங்கப்பட்டன என்று அண்மையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்ட வாரியாக கிளிநொச்சிக்கே அதிகமான மதுபானசாலைக்கான (16) அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement