நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி காரணமாக, பயிர்ச்செய்கைக்காக செலவிட்ட பணத்தைக்கூட மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் லீக்ஸ், கரட், பீட்ரூட் உள்ளிட்ட மரக்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
எனினும், தற்போது விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் லீக்ஸ் சுமார் 120 ரூபாய்க்கும், கரட் 150 ரூபாய்க்கும், பீட்ரூட் 160 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விலைகள் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருப்பதால், பயிர்ச்செய்கையில் முதலீடு செய்த பணத்தை மீளப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, லீக்ஸ் கன்று ஒன்றை கொள்வனவு செய்வதற்கு சுமார் ஒரு ரூபாய் செலவாகும் நிலையில், அதனை நிலத்தில் நடுகை செய்து பராமரிப்பதற்கு 10 ரூபாய்க்கும் அதிகமான செலவு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், மரக்கறிகளுக்கு சந்தையில் கிடைக்கும் விலை உற்பத்திச் செலவைக்கூட ஈடுசெய்ய முடியாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் மரக்கறிகளின் விலை சடுதியாகக் குறைந்துள்ளதாகவும், இதனால் நுவரெலியா மற்றும் வெலிமடை உள்ளிட்ட பகுதிகளில் மரக்கறி பயிர்ச்செய்கையை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கி வரும் அரசாங்கம், நுவரெலியா மற்றும் வெலிமடை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் பிரச்சினைகளில் உடனடியாக கவனம் செலுத்தி, மரக்கறிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செலவைக் கூட ஈடுசெய்யாத விலை – நுவரெலியா விவசாயிகளுக்கு தொடரும் பேரிழப்பு நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி காரணமாக, பயிர்ச்செய்கைக்காக செலவிட்ட பணத்தைக்கூட மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் லீக்ஸ், கரட், பீட்ரூட் உள்ளிட்ட மரக்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.எனினும், தற்போது விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் லீக்ஸ் சுமார் 120 ரூபாய்க்கும், கரட் 150 ரூபாய்க்கும், பீட்ரூட் 160 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இந்த விலைகள் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருப்பதால், பயிர்ச்செய்கையில் முதலீடு செய்த பணத்தை மீளப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.குறிப்பாக, லீக்ஸ் கன்று ஒன்றை கொள்வனவு செய்வதற்கு சுமார் ஒரு ரூபாய் செலவாகும் நிலையில், அதனை நிலத்தில் நடுகை செய்து பராமரிப்பதற்கு 10 ரூபாய்க்கும் அதிகமான செலவு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறான நிலையில், மரக்கறிகளுக்கு சந்தையில் கிடைக்கும் விலை உற்பத்திச் செலவைக்கூட ஈடுசெய்ய முடியாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் மரக்கறிகளின் விலை சடுதியாகக் குறைந்துள்ளதாகவும், இதனால் நுவரெலியா மற்றும் வெலிமடை உள்ளிட்ட பகுதிகளில் மரக்கறி பயிர்ச்செய்கையை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.எனவே, விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கி வரும் அரசாங்கம், நுவரெலியா மற்றும் வெலிமடை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் பிரச்சினைகளில் உடனடியாக கவனம் செலுத்தி, மரக்கறிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.