• Jan 02 2025

இலங்கைக்கான நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு

Tharmini / Dec 22nd 2024, 1:13 pm
image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று டிசம்பர் 20 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள், மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் கல்வி முறைமையை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், மிகவும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான அரச சேவைக்காக நிர்வாக முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஷோபினி குணசேகர மற்றும் நோர்வே தூதரக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




இலங்கைக்கான நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று டிசம்பர் 20 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள், மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.இலங்கையின் கல்வி முறைமையை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், மிகவும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான அரச சேவைக்காக நிர்வாக முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும் வலியுறுத்தினார்.இந்தச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஷோபினி குணசேகர மற்றும் நோர்வே தூதரக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement