மன்னார் மாவட்டத்தில் சர்சைக்குறிய பிரிச்சினைகளாக காணப்படும் கணியமணல் அகழ்வு மற்றும் அதானி நிறுவனத்தின் காற்றாலை செயற்திட்டங்கள் தொடர்பில் வாய் திறக்காது தனது தேர்தல் பிரச்சார உரையை நிறைவு செய்து மன்னாரில் இருந்து பிரதமர் ஹரினி அமரசூரிய வெளியேறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட பிரச்சாரத்தின் போது ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்காவாலும் பிரதமரான ஹரினி அமரசூரியவாலும் கணியமணல் அகழ்வு மற்றும் காற்றாலைக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் இன்றைய தினம் குறித்த விடயங்கள் தொடர்பில் தங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வாய் திறக்காது சென்றுள்ளார் பிரதமர்.
குறிப்பாக மன்னார் மக்கள் நீண்ட காலமாக மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிரக போராடி வருகின்ற நிலையில் தேசிய மக்கள் சக்தியில் தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் சார்பாகவும் அதே நேரம் மக்களுக்கு விருப்பம் இல்லாத எந்த செயற்திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்போவதில்லை என்ற வாக்குறுதியை ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தலின் போதும் வழங்கியிருந்தது
அதே நேரம் மன்னார் நகரசபை கழிவகற்றல் செயற்பாடு கடந்த ஒன்றரை வருடங்கள் நீதிமன்ற நடவடிக்கை ஒன்றின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நகரசபை பகுதி சமூக சீர்கேடுக்கு உள்ளாகியுள்ளது.
இது தொடர்பிலும் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காது பிரதமர் ஹரினி அமரசூரிய 30 நிமிடத்துக்கு மேற்பட்ட உரையை முடிவுறுத்தியுள்ளார்.
கனியமணல் அகழ்வு, காற்றாலை தொடர்பில் மன்னாரில் வாய் திறக்காத பிரதமர் மன்னார் மாவட்டத்தில் சர்சைக்குறிய பிரிச்சினைகளாக காணப்படும் கணியமணல் அகழ்வு மற்றும் அதானி நிறுவனத்தின் காற்றாலை செயற்திட்டங்கள் தொடர்பில் வாய் திறக்காது தனது தேர்தல் பிரச்சார உரையை நிறைவு செய்து மன்னாரில் இருந்து பிரதமர் ஹரினி அமரசூரிய வெளியேறியுள்ளார்.கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட பிரச்சாரத்தின் போது ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்காவாலும் பிரதமரான ஹரினி அமரசூரியவாலும் கணியமணல் அகழ்வு மற்றும் காற்றாலைக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் இன்றைய தினம் குறித்த விடயங்கள் தொடர்பில் தங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வாய் திறக்காது சென்றுள்ளார் பிரதமர்.குறிப்பாக மன்னார் மக்கள் நீண்ட காலமாக மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிரக போராடி வருகின்ற நிலையில் தேசிய மக்கள் சக்தியில் தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் சார்பாகவும் அதே நேரம் மக்களுக்கு விருப்பம் இல்லாத எந்த செயற்திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்போவதில்லை என்ற வாக்குறுதியை ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தலின் போதும் வழங்கியிருந்தது அதே நேரம் மன்னார் நகரசபை கழிவகற்றல் செயற்பாடு கடந்த ஒன்றரை வருடங்கள் நீதிமன்ற நடவடிக்கை ஒன்றின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் நகரசபை பகுதி சமூக சீர்கேடுக்கு உள்ளாகியுள்ளது.இது தொடர்பிலும் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காது பிரதமர் ஹரினி அமரசூரிய 30 நிமிடத்துக்கு மேற்பட்ட உரையை முடிவுறுத்தியுள்ளார்.