• Mar 05 2025

அடுத்த மாத முற்பகுதியில் இலங்கைக்கு வரும் பாரதப் பிரதமர் மோடி? - வெளியான தகவல்

Chithra / Mar 4th 2025, 9:14 am
image


பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்த மாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 6 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்  என தெரியவருகின்றது. 

கொழும்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்திய பிரதமர், சம்பூரில்  மின்திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதேபோல அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபடவுள்ளார் என்று அறியமுடிகின்றது.

இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று தற்போது கொழும்பு வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 


அடுத்த மாத முற்பகுதியில் இலங்கைக்கு வரும் பாரதப் பிரதமர் மோடி - வெளியான தகவல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்த மாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 6 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்  என தெரியவருகின்றது. கொழும்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்திய பிரதமர், சம்பூரில்  மின்திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.அதேபோல அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபடவுள்ளார் என்று அறியமுடிகின்றது.இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று தற்போது கொழும்பு வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement