தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்ட கைதியொருவர் நேற்று (04) உயிரிழந்ததைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறையில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், நேற்றுமுன்தினம் (03) பிற்பகல் சிறையில் உள்ள விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்வதற்காக அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையிலேயே கைதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பிச்சென்ற கைதியை உடனடியாகப் பின்தொடர்ந்த சிறை அதிகாரிகள், பெரும் முயற்சிக்குப் பின் பொரளை பகுதியில் வைத்து கைது செய்தனர்.
அப்போது கைதிக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு கைதி மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படும் கைதி, சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே, சிறைக்கைதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொரெள்ள பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆர். ஓஷத சஞ்சீவ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைதியின் குடும்ப உறவினர்கள், சிறை அதிகாரிகள் அவரைக் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்ட கைதி உயிரிழப்பு - அதிகாரிகள் மூவர் கைது தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்ட கைதியொருவர் நேற்று (04) உயிரிழந்ததைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெலிக்கடை சிறையில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், நேற்றுமுன்தினம் (03) பிற்பகல் சிறையில் உள்ள விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்வதற்காக அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையிலேயே கைதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தப்பிச்சென்ற கைதியை உடனடியாகப் பின்தொடர்ந்த சிறை அதிகாரிகள், பெரும் முயற்சிக்குப் பின் பொரளை பகுதியில் வைத்து கைது செய்தனர். அப்போது கைதிக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கைதி மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படும் கைதி, சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே, சிறைக்கைதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பொரெள்ள பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆர். ஓஷத சஞ்சீவ என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைதியின் குடும்ப உறவினர்கள், சிறை அதிகாரிகள் அவரைக் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.